ஏய்.. என்னப்பா பண்ற! கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் தீபக் சாஹர் செய்த காமெடி.. புன்னகைத்த தோனி!
பெங்களூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன 39வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியின் தீபக் சாஹர் செய்த காரியம் வேடிக்கையாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசியது. பெங்களூர் அணிக்கு விராட் கோலி - பார்த்திவ் பட்டேல் ஜோடி துவக்கம் அளித்தனர்.

கோலி விக்கெட்
அப்போது மூன்றாவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அவுட்-சைடு திசையில் வந்த பந்தை விராட் கோலி டிரைவ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து தோனியிடம் சென்றது. தோனி கேட்ச் பிடிக்க, கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாஹர் ஓட்டம்
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய சாஹர், திடீரென இம்ரான் தாஹிர் விக்கெட் விழுந்தவுடன் கொண்டாடும் அனைத்து செய்கைகளையும் இம்மி பிசகாமல் செய்யத் துவங்கினார். தாஹிர் போலவே கைகளை விரித்துக் கொண்டு ஓடினார்.

தோனி புன்னகை
பின்னர், காற்றில் ஒரு குத்து விட்டார். சாஹர் செய்த காமெடியை கண்ட தோனி, "ஏய்.. என்னப்பா இது" என புன்னகைத்தார். பின்னர் இம்ரான் தாஹிர், கோலி விக்கெட்டை எடுத்த தீபக் சாஹரை தட்டிக் கொடுத்தார்.

தாஹிர் கொண்டாட்டம்
இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் அதை கொண்டாடும் முறையே தனியாக இருக்கும். குறிப்பாக விக்கெட் விழுந்தவுடன் ஓடத் துவங்கும் இம்ரான், பல அடி தூரம் ஓடி, தன் உற்சாகம் தீர்ந்தால் தான் கட்டுக்குள் வருவார்.


Click it and Unblock the Notifications