Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2-3 ரன் பற்றி நீங்க கணக்கு போடலாம்.. ஆனா தோனி சொல்லும் கணக்கு வேற.. தோல்விக்கு காரணம் என்ன?

Recommended Video

IPL 2019:Chennai vs Bengaluru | தோல்விக்கு காரணம் என்ன?.. தோனி சொல்லும் கணக்கு- வீடியோ

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் பெங்களூர் - சென்னை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோனி அதிரடியால் மிரட்டினார். ஐபிஎல் தொடரில் தன் சிறந்த ரன்னை எடுத்தார்.

எனினும், போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தது. தோனி அதிரடியாக 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். திட்டமிட்டு ஆடினார். ஆனால், மூன்று முறை ஒற்றை ரன் ஓட மறுத்தார். அது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பவுண்டரி அடிக்கவில்லை

பவுண்டரி அடிக்கவில்லை

இந்தப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பிராவோ, தோனி களத்தில் இருந்தனர். 19வது ஓவரில் தோனி சிக்ஸ், ஃபோர் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்தை பவுண்டரியாக மாற்ற முடியாமல் தடுமாறினார்.

ரன் ஓடவில்லை

ரன் ஓடவில்லை

ஆனால், அப்போது மூன்று முறை ஒரு ரன் ஓட வாய்ப்பு இருந்தது. எதிரில் இருந்த பிராவோ அதிரடி வீரர் என்ற போதிலும், தோனி ரன் ஓடவில்லை. அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார்.

அந்த ரன்கள்

அந்த ரன்கள்

ஒருவேளை தோனி அந்த மூன்று ரன்களை ஓடி இருந்தால், போட்டியில் சென்னை வெற்றி இருக்கும் என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், தோனி கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 24 ரன்கள் எடுத்தார். அதை பலரும் மறந்து விடுகின்றனர்.

பவுண்டரி தான் குறைவு

பவுண்டரி தான் குறைவு

இந்த நிலையில், தோனி அந்த ஒரு ரன்களை ஓடாதது குறித்து போட்டிக்கு பின் கூறுகையில், இப்போது அங்கே 1 ரன் போனது, இங்கே 2 ரன் போனது என கணக்கு போடலாம். ஆனால், நாங்கள் சில பவுண்டரிகளை அடிக்காமல் விட்டுவிட்டோம் என்றும் சொல்லலாம் என குறிப்பிட்டார்.

Story first published: Monday, April 22, 2019, 12:26 [IST]
Other articles published on Apr 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+