Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அவசரப்படக் கூடாது.. நல்லா ஓய்வு எடுக்கணும்.. அதுதான் எல்லாருக்கும் நல்லது!

Recommended Video

தோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்! அது நல்லது:ஸ்ரீகாந்த் கருத்து

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா, மாட்டாரா? என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனி ஓய்வு எடுக்க வேண்டும் என அதிரடியாக யோசனை கூறியுள்ளார்.

தோனி காயம்

தோனி காயம்

தோனிக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு சில ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்யும் போது கடும் சிரமத்தில் இருந்தார். அதையடுத்து, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை.

தோனியின் நிலை

தோனியின் நிலை

அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. அடுத்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி இருந்து வந்தது. தோனியின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் ஏதும் வரவில்லை.

ஓய்வு

ஓய்வு

இந்த நிலையில் தான் ஸ்ரீகாந்த் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில், உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் அளித்து, முதுகு வலிப் பிரச்சனை முழுமையாக தீரும் வரை, தோனி ஒன்றிரண்டு போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சிஎஸ்கே மற்றும் இந்தியா இரண்டு அணிகளுக்கும் நல்லது. தோனி அவசரப்படக் கூடாது என எழுதியுள்ளார்.

பாதிப்பு ஏற்படுமா?

பாதிப்பு ஏற்படுமா?

மேலும் தோனி ஓய்வு எடுத்தால் சென்னை அணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, சென்னை அணி பிளே-ஆஃப் இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது, எப்படியும் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.

எதிர்காலம்

எதிர்காலம்

ரசிகர்கள் தோனி வரமாட்டாரா என ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், தோனி வர வேண்டாம் அதுதான் அணிக்கு நல்லது என வித்தியாசமான கோணத்தில், எதிர்காலத்தை கருத்தில் வைத்து கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

Story first published: Sunday, April 21, 2019, 15:39 [IST]
Other articles published on Apr 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+