தோனி இப்படி பண்ணுவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. ஆச்சரியப்பட்ட பார்த்திவ் பட்டேல்!
பெங்களூர் : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனி களத்தில் நின்றார். அந்த ஓவரில் ஏற்கனவே, 24 ரன்கள் சேர்த்தார் என்பதால், கடைசி பந்தில் எப்படியும் 2 ரன்கள் எடுத்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கடைசி பந்து வெற்றி
ஆனால், கடைசி பந்தை தவறவிட்டார் தோனி. அதையடுத்து ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் ரன் அவுட் செய்தார். 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது. இந்த கடைசிப் பந்து குறித்து தான் பேசியுள்ளார் பார்த்திவ் பட்டேல்.

திட்டம்
கடைசி பந்தில் தன் அணி என்ன செய்தது, தோனி என்ன செய்தார் என்பது குறித்து கூறினார் பார்த்திவ். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ்வை மெதுவாக பந்து வீசுமாறு கூறினோம்.

எதிர்பார்ப்பு
லெக் திசையில், பந்தை அடித்தால், 2 ரன்கள் வரை எளிதாக ஓடலாம் என்பதால், ஆஃப்-சைடில் பந்தை வீசுமாறு உமேஷ்-க்கு கூறப்பட்டது. தோனி எப்படியும் ஆஃப்-சைடில் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடுவார் என எதிர்பார்த்தோம்.

இதை எதிர்பார்க்கவில்லை
ஆனால், அவர் பந்தை தவறவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறி உள்ளார் பார்த்திவ் பட்டேல். இந்தப் போட்டியில் பார்த்திவ் பட்டேல் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications