சுரேஷ் ரெய்னா இப்படி பண்றாரே.. பேசாம ஓய்வு கொடுங்க.. கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!
Recommended Video
பெங்களூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மோசமாக பேட்டிங் ஆடி வருகிறார். இது சென்னை அணியின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவரது மோசமான செயல்பாடு தொடர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. அதற்கு சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததே காரணமாக அமைந்தது.

டக் அவுட்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஷேன் வாட்சன் முதல் ஓவரின் 5ஆம் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா டக் அவுட் ஆனார். அதனால், சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்தது.

மோசமான சராசரி
2019 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் சராசரி 23. இதுவரை அவர் ஆடிய ஐபிஎல் தொடர்களிலேயே இதுதான் மோசமான பேட்டிங் சராசரி ஆகும். இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார்.

இனி ரன் குவிப்பாரா?
சென்னை அணிக்கு இன்னும் 4 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ரெய்னா இனி வரும் போட்டிகளிலாவது ரன் குவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்து பிளே-ஆஃப் சுற்றும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கவலையில் ரசிகர்கள்
சுரேஷ் ரெய்னா சரியாக ஆடாதது சென்னை அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. சிலர் ரெய்னாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு வேறு வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications