செமையா பயம் காட்டிட்டாரு.. எப்படியோ ஜெயிச்ச வரைக்கும் சந்தோஷம்.. தோனி பற்றி சொன்ன கோலி!!
Recommended Video
பெங்களூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய 39வது லீக் போட்டி, நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த போட்டியாக அமைந்தது. இந்த போட்டியின் வெற்றி குறித்து விராட் கோலி பேசும் போது தோனி பயம் காட்டியதாக குறிப்பிட்டார்.
கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணி வீரர் தாக்குர் ரன் அவுட் ஆக, 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

மிரள வைத்த தோனி
இந்தப் போட்டியில் தோனி நீண்ட காலத்திற்கு பின் எதிரணியை தன் அதிரடியால் மிரள வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட நேரம் களத்தில் நின்று அவ்வப்போது சிக்ஸ், ஃபோர் என அடித்து வந்தார் தோனி.

கடைசி ஓவரில்..
கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், அதிரடியாக சிக்ஸ், ஃபோர் என அடித்து 24 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனியால் பந்தை அடிக்க முடியவில்லை.

வெற்றி
பந்தை அடிக்காமல் ரன் ஓட முயல, ஷர்துல் தாக்குரை ரன் அவுட் செய்தார் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல். பெங்களூர் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. இதயத் துடிப்பை எகிற வைத்த தோனியின் ஆட்டம் குறித்து, வெற்றிக்கு பின் பேசினார் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி.

பயம் காட்டி விட்டார்
கோலி, "கடைசி பந்தில் இதுதான் நடக்க வேண்டும் என நினைத்தேன். குறைந்த வித்தியாசத்தில் வென்றது நல்ல உணர்வை அளிக்கிறது. நாங்கள் நிறைய போட்டியை குறைந்த வித்தியாசத்தில் தோற்றோம். தோனி தான் சிறப்பாக எதை செய்வாரோ, அதை செய்து, எங்கள் எல்லோருக்கும் பயம் காட்டி விட்டார்" என குறிப்பிட்டார்.

தோனி மிரட்டல்
மற்ற சென்னை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் தனி ஆளாக போராடிய, தோனி இந்தப் போட்டியில் 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.


Click it and Unblock the Notifications