For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பாவம்.. செமையாக தர்ம அடி வாங்கிய முகமது ஷமி.. கரம் வைத்து தாக்கிய டி வில்லியர்ஸ்!

பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய லீக் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் வழக்கம் போல அதிரடியில் பின்னி எடுத்துவிட்டார்.

1
45918

இந்த முறை பஞ்சாப் அணியின் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை மட்டும் குறி வைத்த அவர், கடைசி ஓவர்களில் தர்ம அடி கொடுத்தார்.

குறி வைத்து தாக்குதல்

குறி வைத்து தாக்குதல்

பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் கூட்டணியின் ஓவர்களில் நிதானம் காட்டிய டி வில்லியர்ஸ், வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரின் ஓவரை குறி வைத்து தாக்கினார். பார்த்திவ் பட்டேலும் பவர்பிளே ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்களை குறிவைத்து அடித்தார்.

தர்ம அடி

தர்ம அடி

இவர்களின் அதிரடி தாக்குதலில் மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கிய பந்துவீச்சாளர் ஷமி. அவருக்கு அடுத்து அதிக அடி வாங்கிய பந்துவீச்சாளர்கள் அங்கித் ராஜ்புத் மற்றும் ஹார்டஸ் வில்ஜோன்.

ஷமி பரிதாபம்

ஷமி பரிதாபம்

ஷமி தன் முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்திருந்தார். இதில் பார்த்திவ் பட்டேல் வெறித்தனமாக அடித்தவை அதிகம். அடுத்து 19வது ஓவரில் தன் நான்காவது ஓவரை வீசினார் ஷமி. அந்த ஓவரில் டி வில்லியர்ஸ் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, மொத்தமாக 21 ரன்கள் சேர்த்தார்.

பெங்களூர் ஆச்சரியம்

பெங்களூர் ஆச்சரியம்

அதே போல, அங்கித் ராஜ்புத் மற்றும் வில்ஜோன் ஓவர்களையும் விளாசினர் டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ். 20 ஓவர்களின் முடிவில் 170 ரன்களை தாண்டுமா என்ற நிலையில் இருந்த பெங்களூர் அணி, 202 ரன்களை எட்டியது.

பஞ்சாப் பந்துவீச்சு நிலை

பஞ்சாப் பந்துவீச்சு நிலை

தலா நான்கு ஓவர்கள் வீசிய ஷமி 53, அங்கித் ராஜ்புத் 46, வில்ஜோன் 51 ரன்கள் கொடுத்தனர். அதே சமயம், சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் 15, முருகன் அஸ்வின் 31 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள், பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் தெறிக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார்.

Story first published: Wednesday, April 24, 2019, 23:55 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
IPL 2019 RCB vs KXIP : Ab De Villiers, Parthiv Patel attacked pace bowlers of KXIP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+