Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்!!

Recommended Video

IPL 2019: Dale Steyn out of ipl | பெங்களூருக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?- வீடியோ

பெங்களூரு : பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் செல்வதே கடினம் என்ற சூழ்நிலையில் உள்ளது. தற்போது அந்த அணிக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது.

கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பெங்களூர் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயத்தால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டர் நைல் காயம்

கோல்டர் நைல் காயம்

பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி மிகவும் பலவீனமாக இருந்தது. தொடர் தொடங்கி சில நாட்கள் கழித்து ஆஸ்திரேலியாவின் நாதன் கோல்டர் நைல் அந்த அணியில் இணைந்தார். அதனால், அந்த அணி பலம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயத்தால் தொடரில் இருந்து விலகினார்.

உறுதுணை

உறுதுணை

அவருக்கு மாற்று வீரராக டேல் ஸ்டெய்னை களமிறக்கியது பெங்களூர். ஸ்டெய்ன் நல்ல பார்மில் இருப்பதால், அவரது அனுபவம் மற்றும் வேகம் அணிக்கு உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஸ்டெய்ன் தான் ஆடிய 2 போட்டிகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

தோள்பட்டை காயம்

தோள்பட்டை காயம்

ஆனால், திடீரென அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒரு போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். அடுத்த போட்டியில் அவர் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தே டேல் ஸ்டெய்ன் விலகுகிறார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது.

வெற்றிப் பாதை

வெற்றிப் பாதை

ஸ்டெய்ன் வந்த அதே நேரம் தோல்விப் பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பியது பெங்களூர் அணி. 11 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றுள்ள பெங்களூர் அணி அடுத்த மூன்று லீக் போட்டிகளிலும் வென்றால், பிளே-ஆஃப் செல்ல சிறிய வாய்ப்பு உண்டு.

கனவு கலைந்தது

கனவு கலைந்தது

டேல் ஸ்டெய்ன் இருந்தால், தங்கள் அணி வெற்றி பெற்றுவிடும் என கனவு கண்டு கொண்டிருந்த பெங்களூர் அணி ரசிகர்களுக்கு இடியாக வந்து இறங்கியுள்ளது அவரது விலகல் செய்தி. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடிய அவர் விலகும் நிலையில், எங்களுக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது என புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Story first published: Thursday, April 25, 2019, 15:07 [IST]
Other articles published on Apr 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+