அஸ்வினை இப்படி அவமானப்படுத்தலாமா? கோலி செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லை!
Recommended Video
பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய 2019 ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் அஸ்வின் அவுட்டான போது, அவமானப்படுத்தும் வகையிலான உடல் மொழியை வெளிப்படுத்தினார் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 2௦2 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 10 ஓவர்களுக்குப் பின் ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தது. அதனால், கடைசி ஓவர்களில் அழுத்தம் ஏற்பட்டது.

27 ரன்கள் தேவை
கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புதிய பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின். ஒரே ஓவரில் 27 ரன்கள் தேவை என்பதால், தொடர்ந்து சிக்ஸ் அடிப்பது தான் ஒரே வழி என முடிவு செய்த அஸ்வின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றினார்.

கோலி கேட்ச் பிடித்தார்
இதனால், போட்டியில் பரபரப்பு நிலவியது. இரண்டாவது பந்தையும் அஸ்வின் தூக்கி அடித்தார். ஆனால், இந்த முறை பவுண்டரி கோட்டுக்கு அருகே இருந்த விராட் கோலி பந்தை கேட்ச் பிடித்தார்.

உணர்ச்சிவசப்பட்ட கோலி
கேட்ச் பிடித்த உடன் உணர்ச்சிவசப்பட்ட கோலி, கையை ஆட்டி "என்னமோ பயங்கரமா அடிச்ச" என்பது போல அஸ்வினை பார்த்து சைகை செய்தார். இது தேவையற்ற கொந்தளிப்பாக, அநாகரீகமாக இருந்தது.
எல்லை மீறி..
விராட் கோலி களத்தில் விக்கெட் விழும் போதும், எதிரணி பவுண்டரி அடிக்கும் போதும், தேவையற்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். ஆனால், நேற்று நடந்தது கொஞ்சம் எல்லை மீறியதாக இருந்தது.


Click it and Unblock the Notifications