அம்பயர்களே.. நேரத்தை வீணாக்காம.. இப்படி பண்ணி இருக்கலாமே! முன்னாள் வீரர் சொன்ன பலே ஐடியா!!
பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன 49வது லீக் போட்டி மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு, பின்னர் அதுவும் 2 ஓவர்கள் மீதமிருக்கையில், பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்தப் போட்டியில் அதிகாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால், முழு போட்டியையும் நடத்தி முடித்திருக்கலாம் என கூறினார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக்.

தடைபட்ட போட்டி
இந்தப் போட்டி துவங்கும் முன் கடுமையாக மழை பெய்து வந்தது. சுமார் 3 மணி நேரப் போட்டி மழையால் தடைபட்டது. இடையே மழை இல்லாத போது அம்பயர்கள் ஆடுகளத்தை சோதனை செய்தனர்.

நேரம் வீண்
அப்போது பிட்ச்சின் ஒரு புறம் ஈரம் அதிகமாக இருந்தது. அதை சரி செய்ய பல நிமிடங்கள் வீணானது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால், ஒரு புறம் பிட்ச்சை சரி செய்யாமலேயே போட்டியை துவங்கி இருக்க முடியும் என்கிறார் பொல்லாக்.

எப்படி?
அது எப்படி என்பதையும் அவர் கூறினார். போட்டி ஐந்து ஓவர்கள் என குறைக்கப்பட்ட நிலையில், பந்துவீச்சாளர்கள் இருபுறம் இருந்து பந்து வீசாமல், பிட்ச்சின் ஒரே பக்கம் இருந்தே போட்டியின் மொத்த ஓவர்களையும் வீசச் செய்து இருக்கலாம்.

விதியை காரணம் காட்டி..
இதன் மூலம், நேர விரயம் தவிர்க்கப்பட்டு, போட்டியை முன்பே துவங்கி மீண்டும் மழை வருவதற்குள் முடித்திருக்கலாம். ஆனால், விதியை காரணம் காட்டி, இரு அணிகளும் பிளே-ஆஃப் செல்வதில் சிக்கலை உண்டாக்கி இருக்கின்றனர் என்றார் ஷான் பொல்லாக்.

பிளே-ஆஃப் சிக்கல்
இந்தப் போட்டி கை விட்டதை அடுத்து, பெங்களூர் - ராஜஸ்தான் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. ராஜஸ்தான் அணி, மற்ற அணிகளின் வெற்றி - தோல்வியை கவனிக்க வேண்டிய சிக்கலில் உள்ளது.


Click it and Unblock the Notifications