Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாமல் ஒருத்தரிடம் அவுட்டாகும் கோலி, டி வில்லியர்ஸ்.. 2வது ஹாட்ரிக் எடுத்த அந்த மிரட்டல் ஸ்பின்னர்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிய டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

எனினும், பாதி வரை நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் அருமையான ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் வீழ்த்தியவர்களில் இருவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்.

முதல் ஓவர் அதிரடி

முதல் ஓவர் அதிரடி

பெங்களூர் - ராஜஸ்தான் இடையே ஆன போட்டி மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கி முதல் ஓவரில் 23 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை திக்குமுக்காட வைத்தனர்.

கோபால் வீசிய ஓவர்

கோபால் வீசிய ஓவர்

2வது ஓவரை வீச வந்தார் ஸ்ரேயாஸ் கோபால், அவரது முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார் கோலி. மூன்றாவது பந்தில் 2 ரன் எடுத்தார். நான்காவது பந்தை தூக்கி அடித்த கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹாட்ரிக் எடுத்த கோபால்

ஹாட்ரிக் எடுத்த கோபால்

அடுத்த பந்தை ஏபி டி வில்லியர்ஸ் எதிர்கொண்டார். அவரும் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு பந்தை தூக்கி அடிக்க அதுவும் கேட்ச் ஆனது. ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ள வந்தார் அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ், அவரும் கேட்ச் கொடுக்க, ஹாட்ரிக் விக்கெட்கள் சாய்த்தார் கோபால்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

வெறும் 5 ஓவராக மேட்ச் குறைக்கப்பட்டாலும், அதிலும் சுவாரசியம் கூட்டியது கோபாலின் ஹாட்ரிக். பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் கோலி, டி வில்லியர்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததை பார்த்து பெங்களூர் அணி ரசிகர்கள் சப்த நாடியும் அடங்கி இருந்தனர்.

2 முறை

2 முறை

ஸ்ரேயாஸ் கோபால் ஏற்கனவே நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சந்திப்பில் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து ஒரே தொடரில் இரண்டாவது முறையும் அவர்களது விக்கெட்டை, ஹாட்ரிக் முறையில் வீழ்த்தியது அவரை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ஜோடியாக விழும் விக்கெட்

ஜோடியாக விழும் விக்கெட்

அது மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் கோலி - டி வில்லியர்ஸ் இருவரது விக்கெட்டையும் ஒரே போட்டியில் கோபால் வீழ்த்துவது மூன்றாவது முறையாகும். கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை, இந்த ஐபிஎல் தொடரில் இரு முறை ஒரே போட்டியில் இருவரது விக்கெட்டையும் சேர்த்து எடுத்துள்ளார் கோபால்.

நம்பமுடியாத தகவல்

நம்பமுடியாத தகவல்

இன்னொரு நம்பமுடியாத தகவல் - கோபால் பந்துவீச்சில் 12 பந்துகளை சந்தித்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார் விராட் கோலி. அதே போல, 28 பந்துகளில் 4 முறை விக்கெட்டை இழந்துள்ளார் டி வில்லியர்ஸ்.

2வது ஹாட்ரிக்

2வது ஹாட்ரிக்

ஸ்ரேயாஸ் கோபாலுக்கு இந்த ஆண்டில் இது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும். உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஹாட்ரிக் விக்கெட்கள் சாய்த்திருந்தார் கோபால்.

Story first published: Wednesday, May 1, 2019, 11:39 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+