Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருய்யா நீங்க? சன்ரைசர்ஸ் கனவை குழி தோண்டி புதைத்த "திடீர்" வீரர்கள்! கோலி ரொம்ப ஹேப்பி!!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஆன 54வது லீக் போட்டியில் எதிர்பாராத இரண்டு வீரர்கள் ஹைதராபாத் அணியை நொறுக்கித் தள்ளி, பெங்களூர் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

1
45930

இதனால், பிளே -ஆஃ ப் கனவில் இருந்த சன்ரைசர்ஸ் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி வெற்றி பெற்றது எப்படி?

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ஐ கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் சாஹா 20, குப்டில் 30 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல துவக்கம் அளித்தனர். பின்னர் மனிஷ் பாண்டே 9, விஜய் ஷங்கர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சுதாரித்து ஆடிய கேப்டன்

சுதாரித்து ஆடிய கேப்டன்

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதால், சுதாரித்து அதிரடியாக ஆடினார். பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கைவிட்டாலும், கடைசி வரை நின்ற வில்லியம்சன் 70 ரன்கள் குவித்தார்.

வாஷிங்க்டன் சுந்தர் அபாரம்

வாஷிங்க்டன் சுந்தர் அபாரம்

இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் எந்த போட்டியிலும் உருப்படியாக ஆடாத வில்லியம்சன் அரைசதம் கடந்து 20 ஓவர்களில் ஹைதராபாத் அணியை 175 ரன்களை எட்டச் செய்தார். பெங்களூர் அணியில் வாஷிங்க்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்கள் சாய்த்தார்.

 செம அதிர்ச்சி

செம அதிர்ச்சி

அடுத்து பெங்களூர் அணி சேஸிங்கில் செம அதிர்ச்சி கொடுத்தது. பார்த்திவ் பட்டேல் 0, கோலி 16, டி வில்லியர்ஸ் 1 றன் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். 3ஓவர்களுக்குள் 20 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்தது பெங்களூர் அணி.

அந்த இருவர் ஜோடி

அந்த இருவர் ஜோடி

இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் அடித்தது இவர்கள் மூவர் மட்டுமே. அதனால், "பெங்களூர் அணி காலி. மேட்ச் பார்ப்பது வேஸ்ட்" என்றே பலரும் எண்ணினர், ஆனால் , அதன் பின் ஹெட்மயர், குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தனர்.

திடீர் வீரர்கள்

திடீர் வீரர்கள்

இவர்களில் கடந்த நான்கு போட்டிகளில் ஹெட்மயர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். குர்கீரத் ஒரு போட்டியில் 27, மற்றொன்றில் 6 ரன்கள் எடுத்தவர். இந்தப் போட்டியில் திடீர் என சுதாரித்த இந்த இரண்டு வீரர்களும், காட்டு, காட்டென்று காட்டி ஹைதராபாத் அணியை நொறுக்கினர்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

ஹெட்மயர் 75, குர்கீரத் 65 ரன்கள்எடுத்து 18 மற்றும் 19வது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் சென்ற போது வெறும் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூர் அணி 1 விக்கெட் இழந்து போராடி கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி அடிக்க வெற்றி பெற்றது.

வாய்ப்பு போச்சே!

வாய்ப்பு போச்சே!

கோலி, டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததால் வெற்றி எளிதாக கிடைக்கும் என கணக்கு போட்ட ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததோடு, பிளே -ஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. பெங்களூர் அணி ஏற்கனவே பிளே -ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் மற்றொரு அணியின் வாய்ப்பை தட்டி விட்டதில், ஆறுதல் அடைந்து, இந்த ஐபிஎல் தொடரை ஏழாம் இடத்தில் நிறைவு செய்தது.

Story first published: Sunday, May 5, 2019, 1:01 [IST]
Other articles published on May 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+