Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எப்படிங்க.. தோனி செஞ்ச காரியத்துக்கு வெறும் 50% தான் அபராதமா? பின்னாடி என்ன நடந்துச்சு?

Recommended Video

தோனிக்கு அபராதம் குறைவாக விதிக்கப்பட்டதால் காரணம் இதுதான்

சென்னை : அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் தோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. இது குறைவான தண்டனை என பலரும் கூறிய நிலையில், மேட்ச் ரெப்ரீ அறையில் என்ன நடந்தது என தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி எல்லை மீறி ஆடுகளத்துக்குள் சென்று நோ-பால் குறித்து அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.

தண்டனை எதிர்பார்ப்பு

தண்டனை எதிர்பார்ப்பு

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் சென்னை அணியின் வெற்றி உறுதியில்லாத நிலையில், நோ-பால் என அறிவித்துவிட்டு அம்பயர் அதை திரும்பப் பெற்றது பெரும் சர்ச்சையானது. அதற்காக, பவுண்டரியை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லாத பேட்டிங் அணியின் கேப்டன், எல்லை மீறி உள்ளே சென்றது விதிப்படி தவறு என்பதால், தோனிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டது.

விசாரணையின் முடிவு

விசாரணையின் முடிவு

ஆனால், 50 சதவீதம் சம்பளம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. ரெப்ரீ அறையில் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து நடந்த விசாரணையின் முடிவில்தான் இந்த தண்டனை குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்பயர் சொன்னது என்ன?

அம்பயர் சொன்னது என்ன?

விசாரணையில் நோ-பாலை மறுத்த அம்பயர் ஆக்சன்போர்டு, தான் தோனியின் செயலால் பாதிப்படையவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அம்பயரே, இப்படி கூறி விட்டதால்தான் தோனிக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது தான் பதில்

இது தான் பதில்

எனினும், சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் தோனிக்கு சில போட்டிகள் ஆட தடை விதித்து இருக்க வேண்டும், வெறும் 50 சதவீத சம்பளம் அபராதம் என்பது குறைவான தண்டனை என கூறி இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் வகையில் இந்த விசாரணை குறித்த செய்திகள் அமைந்துள்ளன.

Story first published: Sunday, April 14, 2019, 15:35 [IST]
Other articles published on Apr 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+