Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.. சேவாக் வேற.. ரிஷப் பண்ட் வேற.. முன்னாள் வீரருக்கு ரசிகர்கள் திட்டு!

Recommended Video

Sanjay manjrekar: மீண்டும் உளறி ரசிகர்களிடம் வாங்கி கட்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்- வீடியோ

டெல்லி : முன்னாள் இந்திய வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஏதாவது ஒரு கருத்தை ட்விட்டரில் போட்டு விட்டு, ரசிகர்களிடம் திட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த முறை இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் குறித்து புதிய கண்டுபிடிப்பை சொல்லி ரசிகர்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.

ட்விட்டர் பதிவு

அவர் போட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரிஷப் பண்ட், இந்த தலைமுறையின் வீரேந்தர் சேவாக். வித்தியாசமாக கவனிக்கப்பட வேண்டிய பேட்ஸ்மேன்... அதாவது அவரை அவர் போக்கில் விட்டு விடுவது. அவரை தேர்வு செய்யுங்கள் அல்லது அணியில் இருந்து நீக்குங்கள், ஆனால் அவரை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் கூறினார்?

ஏன் கூறினார்?

இவர் இப்படிக் கூற முக்கிய காரணம், சேவாக் ஒன்று அடித்து ஆடுவார் அல்லது ஆட்டமிழந்து விட்டு செல்வார். தன் கிரிக்கெட் வாழ்வின் துவக்கம் முதல் கடைசி வரை சேவாக் அப்படித் தான் பேட்டிங் செய்து வந்தார்.

விமர்சிக்கக் கூடாது

விமர்சிக்கக் கூடாது

அதே போலத் தான் ரிஷப் பண்ட். அதனால், அவரை அவர் வழியில் விட்டுவிட வேண்டும். அவர் விரைவாக ஆட்டமிழந்து செல்லும் போது, அவரை விமர்சிக்கக் கூடாது என்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

மிடில் ஆர்டர் வீரர்

மிடில் ஆர்டர் வீரர்

ஆனால், ரசிகர்கள் சேவாக், துவக்க வீரர் அவர் அப்படி ஆடலாம். ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் வீரர். அவர் வெற்றிக்கு எத்தனை ரன்கள் தேவை, கையில் எத்தனை விக்கெட்கள் உள்ளன என்பதையெல்லாம் உணர்ந்து பொறுப்பாக ஆடித் தான் ஆக வேண்டும்.

இரண்டும் ஒன்றல்ல

இரண்டும் ஒன்றல்ல

ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் அதிரடி ஷாட் ஆடி ஆட்டமிழந்து செல்வதும், சேவாக் துவக்க வீரராக அப்படி ஆடி ஆட்டமிழப்பதும் ஒன்றல்ல என்கிறார்கள். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எதையும் சரியாக யோசிப்பதில்லை என அவரது பதிவின் கீழ் திட்டியும் வருகிறார்கள்.

Story first published: Friday, May 10, 2019, 13:59 [IST]
Other articles published on May 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+