அது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா மீண்டு வந்துட்டேன்.. நம்பிக்கையுடன் பேசும் ரிஷப் பண்ட்!
டெல்லி : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் பெயர் இடம்பெறவில்லை.
அவரது இடத்தை தட்டிச் சென்றார் தினேஷ் கார்த்திக். பலரும் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.

கனவுகள்
தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ரிஷப் பண்ட், தான் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார். ஒவ்வொரு வீரரும் இந்தியாவுக்காக ஆட வேண்டும். உலகக்கோப்பையில் நம் அணிக்காக ஆடவேண்டும் என கனவுகளோடு இருப்பார்கள்.

கவனம்
அதனால், தேர்வு செய்யப்படாமல் போனது கிரிக்கெட் வீரராக ஏமாற்றமாக இருந்தாலும், தொழில்முறையில் ஏமாற்றத்தால் எதுவும் ஆகப் போவதில்லை என தெரியும். அதில் இருந்து மாறி, எனக்கு இருக்கும் வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.

தன்னம்பிக்கை
எனக்கு இன்னும் சில ஐபிஎல் போட்டிகள் உள்ளன. அதில் நன்றாக ஆடவேண்டும் என காத்திருக்கிறேன். நன்றாக விளையாடினால் தான் ஒரு நபராக, தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறினார் ரிஷப் பண்ட்.

அதிரடி ஆட்டம்
ரிஷப் பண்ட் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகாமல் போன பின், டெல்லி கேபிடல் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications