இவருக்கு என்னாமா பில்டப் கொடுத்தீங்க.. கடைசியில காமெடி பீஸா மாத்திட்டாங்களே.. உலகமகா டக்-அவுட்!!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் மோதிய ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஒருவர் டக்-அவுட் ஆனார்.
அது வெறும் டக் அவுட் அல்ல. கிரிக்கெட் வரலாற்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட வேண்டிய தொடர் டக் அவுட். அந்த சரித்திர நாயகன் ஆஷ்டன் டர்னர்.

பில்டப்
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஆஷ்டன் டர்னருக்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரரான அவர்,அதிரடியில் கலக்குவார் என கூறப்பட்டது. அதற்காகவே, அவரை ராஜஸ்தான் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் கடைசி நேரங்களில் களமிறக்கிப் பார்த்தது.

மூன்று முறை
ஆனால், தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் டர்னர். அதுவும் எப்படி? தான் சந்தித்த முதல் பந்திலேயே மூன்று போட்டிகளிலும் டக்-அவுட் ஆகி உள்ளார்.

காமெடி
முதல் இரண்டு டக்-அவுட்கள் வரை அவரைப் பற்றி யாரும் அதிகம் விமர்சிக்கவில்லை. ஆனால், மூன்றாவது முறையும் டெல்லி அணியின் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் டக்-அவுட் ஆகவே பலரும் இதை வேடிக்கையான விஷயமாக மாற்றி கலாய்த்து வருகிறார்கள்.

பாதிக்கு பாதி டக்-அவுட்
ஆஷ்டன் டர்னர் தான் ஆடிய கடைசி 10 போட்டிகளில் மொத்தமாக 5 முறை டக்-அவுட் ஆகி உள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்று முறையும், இந்திய அணிக்கு எதிராக ஒரு முறையும், பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஒரு முறையும் டக் அவுட் ஆகி உள்ளார்.


Click it and Unblock the Notifications