Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானே அடிச்சதெல்லாம் வீணாப் போச்சு.. ராஜஸ்தானை தெறிக்கவிட்ட தவான், பண்ட்! - மேட்ச் ரிப்போர்ட்!

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லீக்ப போட்டியில் அதிக ரன்கள் குவித்தும் மோசமான தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

1
45916

ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்தப் போட்டியில் ரஹானே அடித்த ஐபிஎல் சதம் வீணானது. டெல்லி அணியில் தவான், ரிஷப் பண்ட் ஆடிய அபார ஆட்டம் அந்த அணியை கரை சேர்த்தது.

சஞ்சு சாம்சன் அதிர்ச்சி

சஞ்சு சாம்சன் அதிர்ச்சி

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர், ஸ்டீவ் ஸ்மித், ரஹானே ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.

ரஹானே சதம் அடித்தார்

ரஹானே சதம் அடித்தார்

ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து 50 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 8, டர்னர் 0, பின்னி 19, ரியான் பராக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரஹானே சதம் அடித்து கலக்கினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணிக்கு கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியின் பந்துவீச்சு 15 ஓவர்கள் வரை சுத்தமாக எடுபடவில்லை. அதன் பின் விக்கெட்கள் வீழ்ந்ததால், ராஜஸ்தான் அணியின் வேகம் கடைசி ஓவர்களில் குறைந்தது.

அபார துவக்கம்

அபார துவக்கம்

அடுத்து பேட்டிங் ஆட வந்த டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா 42, தவான் 54 ரன்கள் எடுத்து அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் தாண்டவம்

ரிஷப் பண்ட் தாண்டவம்

பின்னர் ரிஷப் பண்ட் போட்டியை தன் கைகளில் எடுத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்த அவர் அணியை டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். டெல்லி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கோபால், உனட்கட், குல்கர்னி ஆகியோர் படுமோசமாக பந்து வீசினர். தோல்விக்கு முக்கிய காரணமாக மாறினர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பந்துவீச்சாளர்கள் சுழற்சியும் குழப்பத்தை அளித்தது. நல்ல பந்துவீச்சாளர்களை கடைசி ஓவர்களுக்கு சேர்த்து வைத்ததால், நடு ஓவர்களில் ரிஷப் பண்ட் பிளந்து கட்டி விட்டார்.

வெற்றி - தோல்வி

வெற்றி - தோல்வி

இந்த வெற்றியுடன் சேர்த்து, 7 வெற்றிகளுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரன் ரேட் அடிப்படையில் முந்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். ராஜஸ்தான் அணி இந்த தோல்விக்குப் பின் கிட்டதட்ட தன் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது.

Story first published: Tuesday, April 23, 2019, 0:37 [IST]
Other articles published on Apr 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+