Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னால ஒரு போன் போச்சேப்பா.. ஜெயதேவ் உனட்கட்டை கலாய்த்த ஸ்டீவ் ஸ்மித்.. என்ன நடந்துச்சு?

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதிய ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும், சிறந்த கேட்ச் பிடித்ததற்காக ஒரு ஸ்மார்ட்போனை பரிசாக வென்றார். அதை வைத்து தான் அவரை கலாய்த்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

கேட்ச்களால் கிடைத்த வெற்றி

கேட்ச்களால் கிடைத்த வெற்றி

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் சில அற்புதமான கேட்ச்கள் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பீல்டிங்கில் அந்த அணி நிறைய ரன்களை கோட்டை விட்டாலும், கேட்ச்கள் மூலம் விக்கெட் எடுத்து அதை சரிக்கட்டியது.

அற்புத கேட்ச்

அற்புத கேட்ச்

ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் தொடர்ந்து ரன் குவித்து வந்த நிலையில், அவர் மேலே தூக்கி அடித்த பந்தை ஸ்டீவ் ஸ்மித் ஓடிக் கொண்டே பிடித்து அசத்தினார். மிகமிகக் கடினமான அந்த கேட்சை பிடிக்கும் போது முழங்கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டார் ஸ்டீவ் ஸ்மித்.

3 கேட்ச்கள் பிடித்த உனட்கட்

3 கேட்ச்கள் பிடித்த உனட்கட்

அதன் பின் ஜெயதேவ் உனட்கட் மூன்று கேட்ச்கள் பிடித்தார். அதில் இரண்டு கேட்ச்கள் சிறந்த கேட்ச் என்ற வரையறையில் வந்தன. குறிப்பாக, பந்து வீசிய போது, பேட்ஸ்மேன் நேராக அடித்த பந்தை விரல் நுனிகளில் பிடித்தார். தனக்கு முன்னே வந்த மற்றொரு கேட்சை டைவ் அடித்து பிடித்தார்.

பரிசை யாருக்கு?

பரிசை யாருக்கு?

ஆனால், ஸ்டீவ் ஸ்மித் அளவுக்கு அடி வாங்கி எல்லாம் அவர் பிடிக்கவில்லை. எனினும், போட்டி இறுதியில் சிறந்த கேட்ச்சுக்கான ஸ்மார்ட்போன் பரிசை தட்டிச் சென்றார் உனட்கட். போட்டி முடிந்தபின் இருவரும் ஒருவரை ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டனர்.

போன் போச்சு

போன் போச்சு

அப்போது, ஸ்டீவ் ஸ்மித், "உன்னால எனக்கு ஒரு போன் போச்சு" என வேடிக்கையாக கூறி அவரை கலாய்த்தார். அதற்கு சமாளித்து பதிலளித்த உனட்கட், "உங்க கேட்ச் சூப்பரா இருந்தது. ஆனால், நான் மூன்று கேட்ச் பிடித்தேன் என்று எனக்கு கொடுத்துட்டாங்க" என்றார்.

Story first published: Sunday, April 28, 2019, 13:45 [IST]
Other articles published on Apr 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+