Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்க்கவே பரிதாபமா இருக்கே.. எப்படி இருந்த கேன் வில்லியம்சன்.. இப்படி ஒண்ணுமே இல்லாம போயிட்டாரே!!

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் படு மோசமாக பேட்டிங் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரையே கலக்கி எடுத்த வில்லியம்சன் இந்த ஆண்டு இருக்கும் இடம் தெரியாமல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

விரைவில் வீழ்ந்த விக்கெட்

13 ரன்கள்

13 ரன்கள்

இந்த சீசனில் இதுவரை ஐந்து போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார் கேன் வில்லியம்சன். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வில்லியம்சன் திணறல்

வில்லியம்சன் திணறல்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை கணிக்க முடியாமல் திணறிய வில்லியம்சன், பௌல்டு அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடந்த சீசனில் 700 ரன்களுக்கும் மேல் குவித்த வில்லியாம்சனா இது என ஹைதராபாத் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

2018ஆம் ஆண்டு..

2018ஆம் ஆண்டு..

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 735 ரன்கள் குவித்தார் வில்லியம்சன். அப்போதைய சராசரி 52.50. அந்த ஒரு ஆண்டில் மட்டும் எட்டு அரைசதங்கள் அடித்து கலக்கி இருந்தார்.

படுமோசம்

படுமோசம்

ஆனால், இந்த ஆண்டு இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அவர் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 10.25 ஆகும். "எப்படி இருந்த கேன் வில்லியம்சன், இப்படி ஒண்ணுமே இல்லாம போயிட்டாரே" என ஹைதராபாத் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Story first published: Saturday, April 27, 2019, 23:29 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+