For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு டென்ஷன் இல்லை.. பரபரப்பு இல்லை.. என்னங்க டி20 இது? சன்ரைசர்ஸ்-ஐ ஊதித் தள்ளிய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது.

1
45921

இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி பேட்டிங்கில் சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தியது. மற்றபடி, பேட்டிங்கில் கடைசி ஓவர்கள் மற்றும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால், போட்டி எந்த பரபரப்பும் இன்றி முடிந்தது.

மனிஷ் - வார்னர் ஜோடி

மனிஷ் - வார்னர் ஜோடி

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் மனிஷ் பாண்டே - டேவிட் வார்னர் இணைந்து அருமையாக ரன் குவித்தனர். வார்னர் 37, மனிஷ் பாண்டே 61 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.

மிடில் ஆர்டர் தடுமாற்றம்

மிடில் ஆர்டர் தடுமாற்றம்

அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு பந்துகளில் ரஷித் கான் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியின் வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து ராஜஸ்தான் சேஸிங் செய்தது. ரஹானே, லியாம் லிவிங்க்ஸ்டன் துவக்கம் அளித்து ஆடினர்.

ராஜஸ்தான் ரன் குவிப்பு

ராஜஸ்தான் ரன் குவிப்பு

இவர்கள் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட செய்வதறியாது திகைத்தனர் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள். லிவிங்க்ஸ்டன் 26 பந்துகளில் 44 ரன்கள், ரஹானே 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியை தொடர்ந்தார். அதனால், எப்படியும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுவிடும் என 14-15 ஓவர்கள் இருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவர் வெற்றி

கடைசி நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தாலும், வெற்றிக்கு அருகே இருந்தது ராஜஸ்தான் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் போல கடைசி பந்து வரை செல்ல மாட்டோம் என பிடிவாதமாக இருந்த ராஜஸ்தான் கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தது.

பிளே-ஆஃப் சிக்கல்

பிளே-ஆஃப் சிக்கல்

19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி தன் பிளே-ஆஃப் செல்லும் நூலிழை வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹைதராபாத் அணி இந்த தோல்வியின் மூலம், தன் பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டுள்ளது.

Story first published: Sunday, April 28, 2019, 0:19 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
IPL 2019 RR vs SRH : Rajasthan Royals vs Sunrisers Hyderabad 45th match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+