Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு தான் மோசமா பௌலிங் போடுறாரே.. விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதிய போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. அபாரமாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது, அதை அடைக்கத் தவறியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ரன் ரேட்

ரன் ரேட்

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 160 ரன்கள் குவித்தது. அடுத்து அதை சேஸிங் செய்த ராஜஸ்தான் எந்த சிரமும் இன்றி பேட்டிங் செய்தது. ஓவருக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சேஸிங்கை துவங்கிய அந்த அணிக்கு, எந்த கட்டத்திலும் ரன் ரேட் அழுத்தம் பாதிப்பாக இருக்கவில்லை.

4 பந்துவீச்சாளர்கள்

4 பந்துவீச்சாளர்கள்

ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் ஷாகிப் அல் ஹசன் மற்றும் கலீல் அஹ்மது ஓவருக்கு 8.2 ரன்கள் கொடுத்திருந்தனர். புவனேஸ்வர் குமார் ஓவருக்கு 5.50, ரஷித் கான் ஓவருக்கு 7.50 ரன்கள் கொடுத்திருந்தார். இவர்கள் பந்துவீச்சை மட்டும் வைத்துப் பார்த்தால் ஓவருக்கு எட்டு ரன்களுக்ம் குறைவாகவே எடுத்துள்ளது ராஜஸ்தான்.

சறுக்கல்

சறுக்கல்

ஆனால், ஹைதராபாத் அணி சறுக்கியது சித்தார்த் கௌல்-ஆள் மட்டுமே. அவர் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இவர் தான் வீசிய முதல் மூன்று ஓவர்களில் மட்டுமே 43 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

குறைந்த ரன்கள் கொடுத்த ஓவர்

குறைந்த ரன்கள் கொடுத்த ஓவர்

இவர் 19வது ஓவரை தன் நான்காவது ஓவராக வீசினார். அப்போது ராஜஸ்தான் அணி 9 ரன்களே தேவை என்ற நிலையில் பவுண்டரிக்கு ஆசைப்படாமல், ஒற்றை ரன்களாக எடுத்து சமாளித்து வந்தது. அதனால், அந்த ஓவரில் மட்டும் குறைவாக 5 ரன்கள் கொடுத்தார்.

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பில்லை

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பில்லை

சித்தார்த் கௌல் பந்தில் ரன்களை அடித்து தள்ளினாலும், ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பிடிவாதமாக இருந்து ஆறாவது பந்துவீச்சாளரான விஜய் ஷங்கரை களமிறக்கவில்லை. ஒருவேளை விஜய் ஷங்கர் பந்துவீச்சில் கட்டுக் கோப்பாக வீசி இருந்தால், போட்டி வேறு மாதிரி சென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

Story first published: Sunday, April 28, 2019, 11:58 [IST]
Other articles published on Apr 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+