For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2019 : முதல் போட்டியில் தோனியின் சிஎஸ்கே-வோடு மோதப் போவது யார்? அட்டவணை வெளியானது!

Recommended Video

IPL 2019 Schedule: ஐபிஎல் அட்டவணை வெளியானது: முதல் போட்டியிலேயே சென்னை பெங்களூரு அணி மோதல்

மும்பை : ஐபிஎல் 2019 டி20 தொடருக்கான முதல் இரு வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதிகள் தெரியாத நிலையில் பிசிசிஐ முன்னெச்சரிக்கையாக இரண்டு வாரங்களுக்கான அட்டவணையை மட்டும் தயார் செய்துள்ளது.

குழப்பம் இருந்தது

குழப்பம் இருந்தது

ஐபிஎல் தொடர் 12வது சீசனை எட்டியுள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா, வெளிநாட்டுக்கு செல்லுமா என்ற சந்தேகம் இருந்தது.

தேர்தலால் மாற்றம்

தேர்தலால் மாற்றம்

பின்னர் பிசிசிஐ, விளையாட்டு அமைச்சகத்துடன் பேசி ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்தது. தேர்தல் நடக்கும் இடங்கள், தேதிகளுக்கு ஏற்ப போட்டிகள் நடக்கும் தேதிகள் மற்றும் இடங்கள் மாற்றி அமைக்கப்படும் என பிசிசிஐ கூறியது.

போட்டி அட்டவணை வெளியீடு

அதற்கேற்ப தற்போது மார்ச் 23 முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதல் போட்டியில் சென்ற ஆண்டின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

மீதமுள்ள அட்டவணை

மீதமுள்ள அட்டவணை

மீதமுள்ள தொடருக்கான அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் தேதிகள் தற்போது வெளியாகி உள்ள போட்டி அட்டவணைக்கு பாதகமாக இருந்தால், இதிலும் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

குறைந்த பட்சம் நான்கு

குறைந்த பட்சம் நான்கு

தற்போது வெளியாகி உள்ள இரு வார அட்டவணைப்படி ஒவ்வொரு அணியும் குறைந்த பட்சம் நான்கு போட்டிகள் ஆடும் படி அட்டவணை தயாராகி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகள் மட்டும் ஐந்து போட்டிகளில் பங்கேற்கும்.

முதல் போட்டியில் தோனி - கோலி

முதல் போட்டியில் தோனி - கோலி

ஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டியில் தோனியின் சென்னை அணியுடன், கோலியின் பெங்களூர் அணி மோத உள்ளது. இந்த முதல் போட்டி தோனி மற்றும் கோலி ரசிகர்களை ஈர்க்கும் என்பதால் 2019 ஐபிஎல் அட்டகாசமான துவக்கத்தை பெறும்.

போட்டி நேரம்

போட்டி நேரம்

இந்த இரண்டு வாரங்களில் 17 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியின் துவக்க நாள் தவிர்த்து, சனி, ஞாயிறுகளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெறும். இரு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 4 மணிக்கு துவங்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகள் - மார்ச் 23 - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர், மார்ச் 26 - டெல்லி கேபிடல்ஸ், மார்ச் 31 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 3 - மும்பை இந்தியன்ஸ்

Story first published: Tuesday, February 19, 2019, 17:46 [IST]
Other articles published on Feb 19, 2019
English summary
IPL schedule for first 2 weeks announced. The opener match is between CSK vs RCB match at March 23.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+