தோனி சர்ச்சையில் எல்லா முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு.. ஆனா இவர் மட்டும் பகிரங்க ஆதரவு!!
Recommended Video

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் தோனி, ஆடுகளத்துக்குள் எல்லை மீறி நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முன்னாள் வீரர்கள் பலர் தோனி நட்சத்திர வீரர் என்றாலும், அவர் செய்தது தவறுதான் என கூறி வருகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மாறிவிட்டது எனவும் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் கங்குலி, தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கங்குலி ஆதரவு
இந்த நிலையில், முன்னாள் கேப்டனும், ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ்-இன் ஆலோசகருமான சௌரவ் கங்குலி, தோனிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார். எல்லோரும் மனிதர்கள் என கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதர்கள்
இது குறித்து பேசிய கங்குலி, "எல்லோருமே மனிதர்கள்தான். அங்கே எழுந்து நின்றது அவரது போட்டி மனப்பான்மைதான். அது குறிப்பிடத்தக்கது" என்றார். தோனியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் கங்குலியின் ஆதரவு பலரையும் வியப்படைய செய்துள்ளது.

போட்டி மனப்பான்மை
அம்பயர் நோ-பால் என அறிவித்துவிட்டு மீண்டும் அதை திரும்பப் பெற்ற போது, தோனி அதை எதிர்த்து அம்பயருடன் வாக்குவாதம் செய்ய களத்துக்குள் சென்றது விதிமீறல். ஆனால், அம்பயர் செய்த அந்த தவறால் போட்டியில் தன் அணி தோற்று விடக் கூடாது என்று தான் அவ்வாறு செய்தார் என கங்குலி சுட்டிக் காட்டியுள்ளார்.

யாரும் செய்ததில்லை
மேலும், தோனியின் செயல் தவறு என்றாலும், அவரும் மனிதர் தானே என்கிறார் கங்குலி. ஆனால், உண்மையில் எந்த பேட்டிங் அணியின் கேப்டனும், களத்தில் பேட்டிங் ஆடாத சமயத்தில் எல்லை மீறி ஆடுகளத்துக்குள் நுழைந்து அம்பயருடன் வாக்குவாதம் செய்ததில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கங்குலி தோனியை ஆதரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications