For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லோரும் கோலி கேப்டன்சி சரியில்லை-ன்றாங்க.. இந்த முன்னாள் கேப்டன் மட்டும் கோலிக்கு ஆதரவா பேசறாரே!!

டெல்லி : 2௦19 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால், கைவிடப்பட்டதை அடுத்து, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்.

இந்த சீசனில் விராட் கோலியின் மோசமான கேப்டன்சி தான் பெங்களூர் அணியின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், சௌரவ் கங்குலி அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அதனால், இந்த சீசன் தொடங்கும் முன்பே, கோலியை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

பெரும் சறுக்கல்

பெரும் சறுக்கல்

ஆனாலும், கோலியின் கேப்டன்சியில் எந்த மாற்றமும் இல்லை. பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் பெரும் சறுக்கலை சந்தித்தார் கோலி. தன் அணி வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டாமல், எல்லா போட்டியையும், தானும், டி வில்லியர்ஸ்-ம் மட்டுமே ஆடி வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு வந்தார்.

ஏராளமான புகார்கள்

ஏராளமான புகார்கள்

இப்படி கோலி மீது ஏராளமான கேப்டன்சி சொதப்பல் புகார்கள் உள்ளன. ஐபிஎல் தொடரை அடுத்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால், ரசிகர்கள் கோலியின் கேப்டன்சி குறித்து அதிருப்தியில் உள்ளனர்.

கோலி சாதனை

கோலி சாதனை

ஆனால், கங்குலி ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "விராட்-ஐ அவரது டி20 கேப்டன்சியை வைத்து எடை போடாதீர்கள். இந்திய கேப்டனாக அவரது சாதனை மிக மிக நன்றாக உள்ளது" என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். உலகக்கோப்பையில் என்ன நடக்கப் போகுதோ?!

Story first published: Wednesday, May 1, 2019, 15:32 [IST]
Other articles published on May 1, 2019
English summary
IPL 2019 : Sourav Ganguly supports Virat Kohli after RCB loss play-off spot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+