Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களே! தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன?

Recommended Video

சென்னைக்கு எதிரான 33வது லீக் போட்டியில் ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக தோனி களமிறங்கவில்லை.

சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, அடைந்த தோல்வி மூலம் சிஎஸ்கே-வில் தோனியின் முக்கியத்துவம் எத்தகையது என படம் போட்டுக் காட்டியது.

துவக்கம் சூப்பர்

துவக்கம் சூப்பர்

தோனி கேப்டனாக இருந்த போட்டிகளில் சென்னை அணியில் டு ப்லேசிஸ் தவிர யாரும் சிறப்பாக துவக்கம் அளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் முதல் விக்கெட் விரைவில் விழுந்துவிடும். ஆனால், ஹைதராபாத் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. ஆனால், அதை பயன்படுத்த தவறியது சென்னை.

மிடில் ஆர்டர் சரிவு

மிடில் ஆர்டர் சரிவு

தோனி ஆடிய அனைத்து போட்டிகளிலும் மிடில் ஆர்டர் சிறப்பகாவே செயல்பட்டது. தோனி களத்தில் இறங்கினால், அவருடன் பேட்டிங் ஆடும் வீரரும் கடைசி வரை நின்று ஆடினார். ஆனால், இந்தப் போட்டியில் தோனி இல்லாத நிலையில், ரெய்னா, ஜாதவ், பில்லிங்க்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கடைசி ஓவர்கள் சொதப்பல்

கடைசி ஓவர்கள் சொதப்பல்

இந்த ஐபிஎல் தொடரில், தோனி எப்போதும் முதலில் பொறுமை காத்து கடைசி 2-3 ஓவர்களில் அதிரடி காட்டினார். அதில் முதல் பாதியை சரியாக செய்தது ராயுடு - ஜடேஜா ஜோடி. முதலில் நிதானம் காட்டிய அவர்கள், கடைசி பந்து வரை நிதானம் மட்டுமே காட்டினர். இந்த நேரத்தில் தோனி ராஜஸ்தான் போட்டியில் கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

தோனி ஒரு கேப்டனாக பேட்டிங்கை விட பந்துவீச்சுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார். அதை பல போட்டிகளில் நாம் பார்த்துவிட்டோம். தோனி கேப்டன் என்றால், சராசரியான பந்துவீச்சை கொண்ட அணி கூட பலமான பந்துவீச்சு அணியாக மாறிவிடும். அதற்கு, உதாரணம், இந்த ஐபிஎல் தொடர் தான்.

போட்டிக்கு, போட்டி வெற்றி

போட்டிக்கு, போட்டி வெற்றி

சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு தான் இந்த சீசனில் ஆடும் அத்தனை அணிகளிலும் மிக மோசமானது. எனினும், தோனி அதை வைத்தே போட்டிக்கு, போட்டி வெற்றி பெற்றுக் காட்டினார். அவர்கள் அனைவருமே தோனி இருந்த போது ஓரளவு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், ஹைதராபாத் போட்டியில் அனுபவ வீரர்கள் ஜடேஜா, தாஹிர் தவிர அனைவருமே ரன்களை வாரி இறைத்தனர்.

தோனியின் திட்டங்கள்

தோனியின் திட்டங்கள்

இது எல்லாவற்றையும் விட, கேப்டனாக தோனி தன் உள்ளுணர்வை நம்புவார். அதை வைத்தே விக்கெட் வீழ்ச்சியை உருவாக்குவார், ஒரு சிறிய பீல்டிங் மாற்றம், பந்துவீச்சாளருக்கு தரும் சைகை ஆகியவை விக்கெட் விழக் காரணமாக அமையும். ஹைதராபாத் போட்டியில் அது சுத்தமாக இல்லை.

Story first published: Thursday, April 18, 2019, 0:25 [IST]
Other articles published on Apr 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+