Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா தலைமையில் சிஎஸ்கே! அப்ப தோனி ஆடலையா? என்னங்க ஆச்சு தோனிக்கு? பரபரக்கும் ரசிகர்கள்!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கி உள்ளது.

1
45909

இதனால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, தோனிக்கு என்ன ஆச்சு? என கேட்டு வருகிறார்கள். தோனிக்கு காயமா? எனவும் விசாரித்து வருகிறார்கள்.

முதுகுப் பிடிப்பு

முதுகுப் பிடிப்பு

தோனி கடந்த இரு போட்டிகளாக முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் பேட்டிங்கின் போது தோனி சிரமப்பட்டார்.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார் தோனி. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்தப் போட்டிக்கு தலைமை ஏற்று அணியை வழிநடத்துகிறார்.

2010க்குப் பின்..

2010க்குப் பின்..

கடந்த 2010க்குப் பின் தற்போது தான் தோனி சென்னை அணிக்காக ஆடாமல் ஒரு போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி ஆடாத நான்காவது போட்டி இதுதான்.

3வது விக்கெட் கீப்பர்

3வது விக்கெட் கீப்பர்

இந்தப் போட்டியில் தோனி இல்லாத நிலையில், விக்கெட் கீப்பிங் பணியை சாம் பில்லிங்க்ஸ் ஏற்றுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது விக்கெட் கீப்பர். இதுவரை சென்னை அணிக்கு 146 போட்டிகளில் தோனியும், 9 போட்டிகளில் பார்த்திவ் பட்டேலும் விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளனர்.

Story first published: Wednesday, April 17, 2019, 22:21 [IST]
Other articles published on Apr 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+