Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஜடேஜா என்னதான் நினைச்சுட்டு இருக்காரு? வெறுப்பின் உச்சத்துக்கு சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்!!

Recommended Video

ஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய போட்டியில், ஜடேஜா நிதானமாக ரன் சேர்த்து பொறுமையை சோதித்தார்.

அது எந்த அளவு மோசமாக இருந்தது என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு செல்ல வைத்தது.

அருமையான துவக்கம்

அருமையான துவக்கம்

2௦19 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில், ஹைதராபாத் அணிக்கு எதிராக, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 9.5 ஓவர்களில் 79 ரன்கள் குவித்த துவக்க ஜோடி வாட்சன், டு ப[ப்லேசிஸ் சென்ற பின், விக்கெட்களை விரைவாக இழந்து வந்தது சென்னை.

டெஸ்ட் ஆட்டம்

டெஸ்ட் ஆட்டம்

14.4 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கினார் ஜடேஜா. அந்த ஓவரில் தொடங்கி நிதானமாக ஆடி வந்த ஜடேஜா, ஒரு கட்டத்தில் டி20யில் ஆடுகிறாரா? இல்லை டெஸ்ட் போட்டியில் ஆடுகிறாரா? என கேட்கும் நிலையில் இருந்தார்.

கடைசி ஓவர் சொதப்பல்

கடைசி ஓவர் சொதப்பல்

அதன் பின்னும் சுதாரிக்காத ஜடேஜா, கடைசி ஓவரில் 4 பந்துகளை சந்தித்து அதில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருடன் கூட்டணி அமைத்த அம்பதி ராயுடு பவுண்டரி அடிக்கத் திணறினாலும், 21 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால், ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து சென்னை அணி ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி அளித்தார். ஜடேஜா கடைசி ஓவரிலாவது பவுண்டரி அடிக்க முயன்று இருந்தால், சென்னை அணி 140-150 ரன்களை தொட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

சென்னை பின்னடைவு

சென்னை பின்னடைவு

ஜடேஜாவின் மோசமான பேட்டிங்கால் சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி இந்த சிறிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, April 17, 2019, 23:27 [IST]
Other articles published on Apr 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+