இது சாதாரண தப்பு இல்லை.. உலகமகா தப்பு.. சன்ரைசர்ஸ் தோல்விக்கு கேப்டன் எடுத்த இந்த முடிவுதான் காரணம்!
விசாகப்பட்டினம் : 2019 ஐபிஎல் தொடரின் பிளே-சுற்றில் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடி வந்தது. 5 விக்கெட் இழந்து, ரிஷப் பண்ட், ரூதர்போர்டு களத்தில் பேட்டிங் செய்து வந்தனர்.

ஹைதராபாத் நிலை
18வது ஓவரில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினாலும் அல்லது பண்ட், ரூதர்போர்டு விக்கெட்களை மட்டும் எடுத்தாலும் கூட ஹைதராபாத் அணி வெற்றிக்கு மிக அருகே கடைசி ஓவரை எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

ஓவர்கள் கணக்கு
ஹைதராபாத் அணியில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வேட்டை நடத்தி வரும் கலீல் அஹ்மதுக்கு இரண்டு ஓவர்களும், அனுபவ வீரர் புவனேஸ்வர் குமாருக்கு ஒரு ஓவரும் மீதமிருந்தன.

மக்கள் எண்ணம்
எனவே, இவர்கள் இருவரும் கடைசி மூன்று ஓவர்களை வீசுவார்கள்.. எப்படியும் இவர்களை மீறி டெல்லி அணி வெற்றி பெற முடியாது என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் எண்ணினர்.

தவறான முடிவு
ஆனால், கேப்டன் வில்லியம்சன் 18வது ஓவரை புதிய வீரர் பேஸில் தம்பியிடம் கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ரிஷப் பண்ட் சிக்ஸ், ஃபோர் அடித்துத் தள்ள, அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

டெல்லி வெற்றி
அடுத்த ஓவரில் புவனேஸ்வர் குமார் ரூதர்போர்டு, ரிஷப் பண்ட் விக்கெட்டை எடுத்தாலும், கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலையில், டெல்லி அணியின் பின்வரிசை வீரர்கள் தட்டித் தடவி, வெற்றிக் கோட்டை தொட்டு விட்டனர்.

புலம்பல்
ஒருவேளை 18வது ஓவரை கலீல் அஹ்மது வீசி இருந்தால், ஹைதராபாத் வெற்றி பெற்று இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். கேப்டன் கேன் வில்லியம்சன் உலகமகா தப்பு செய்துவிட்டார் என ஹைதராபாத் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications