Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேப்டன் எனக்கு ஒரு உதவி பண்ணாரு.. பதிலுக்கு நான் ஒரு உதவி பண்ண வேணாமா? அடடே.. விஜய் ஷங்கர்!

டெல்லி கேப்டன் எனக்கு ஒரு உதவி பண்ணாரு.. பதிலுக்கு நான் ஒரு உதவி பண்ண வேணாமா? அடடே.. விஜய் ஷங்கர்!

விசாகப்பட்டினம் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

IPL 2019 SRH vs DC Eliminator : Shreyas Iyer caught the ball and throw it out for six

அந்த அணியின் விஜய் ஷங்கர், கடைசி ஓவர்களில் அணியை பெரிய ரன்களை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

19வது ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்த விஜய், அடுத்த பந்தை தூக்கி அடித்தார். எங்கிருந்தோ ஓடி வந்த டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி எல்லை அருகே பந்தை கேட்ச் பிடித்தார்.

எனினும், அவர் ஓடி வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டிச் செல்ல நேர்ந்தது. அதற்கு முன் பந்தை தவானிடம் வீசி கேட்ச் பிடிக்கச் செய்யலாம் என திட்டமிட்டு, பந்தை மேலே எறிந்தார். ஆனால், பந்து பவுண்டரி எல்லையை தாண்டி சென்று சிக்ஸ் ஆனது.

அவுட்டாக வேண்டிய விஜய் ஷங்கர் சிக்ஸ் கிடைத்த குஷியில் இருந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே மீண்டும் பந்தை தூக்கி அடித்தார். இப்போது, பந்து எந்த சிரமமும் இன்றி நேராக பீல்டர் நின்றிருந்த இடத்திற்கே சென்றது. 25 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் ஷங்கர்.

விஜய் ஷங்கர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே தன் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தப் போட்டியிலாவது பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஓரளவு மட்டுமே ரன் குவித்தார்.

ஆமாம்.. ஏன்பா விஜய் ஷங்கர் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்தார்.. கேட்ச் பிடிக்கப் போய்.. சிக்ஸ் கொடுத்த டெல்லி கேப்டனுக்கு உதவி செய்தாரோ?

Story first published: Wednesday, May 8, 2019, 22:08 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+