Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் எடுத்த அந்த ஒரு முடிவால் சன்ரைசர்ஸ் தோல்வி.. தட்டுத் தடுமாறி.. கடைசி ஓவரில் வென்ற டெல்லி!!

விசாகப்பட்டினம் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய 2019 ஐபிஎல் தொடரின் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) டெல்லி அணி தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது.

1
45947

ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வெற்றிக்கு அருகே சென்ற போது, எடுத்த ஒரு முடிவு, அந்த அணிக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தி தோல்வியை சந்திக்க வைத்தது. டெல்லி எப்படி வெற்றி பெற்றது?

ஹைதராபாத் சுமார் பேட்டிங்

ஹைதராபாத் சுமார் பேட்டிங்

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் எந்த வீரரும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. எனினும், துவக்க வீரர் சாஹா தவிர்த்து, முன் வரிசை மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன் குவித்தனர்.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

சாஹா 8, குப்டில் 36, மனிஷ் பாண்டே 30, கேன் வில்லியம்சன் 28, விஜய் ஷங்கர் 25, நபி 20 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது ஹைதராபாத். இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கை எட்டுவது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என கருதப்பட்டது.

ப்ரித்வி ஷா அரைசதம்

ப்ரித்வி ஷா அரைசதம்

அடுத்து டெல்லி அணியின் சேஸிங்கில் துவக்க வீரர் தவான் 17, ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். ப்ரித்வி ஷா அபாரமாக ஆடி அரைசதம் அடித்து, 56 ரன்களில் வெளியேறினார். பின்னர், கோலின் மன்றோ 14, அக்சர் பட்டேல் 0 ரன்களில் வெளியேற போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியம்சன் செய்த தவறு

வில்லியம்சன் செய்த தவறு

அப்போது, ரிஷப் பண்ட் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு அதிரடி காட்டினார். கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்தை அதிக அனுபவமற்ற பேஸில் தம்பியிடம் கொடுத்தார். அப்போது சிறப்பாக பந்து வீசி இருந்த கலீல் அஹ்மதுக்கு இரண்டு ஓவர்கள் மீதமிருந்தன.

பேட்ஸ்மேன்கள் இல்லை!

பேட்ஸ்மேன்கள் இல்லை!

அந்த 18வது ஓவரில் ரிஷப் பண்ட் அதிரடி காட்ட, டெல்லி அணி 22 ரன்கள் குவித்தது. பின்னர் 19வது ஓவரில் புவனேஸ்வர் குமார் ரிஷப் பண்ட் 49, ரூதர்போர்டு 9 என இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்களையும் சாய்க்க, டெல்லி அணியில் ரன் குவிக்கும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர்.

அமித் மிஸ்ரா ரன் அவுட்

அமித் மிஸ்ரா ரன் அவுட்

எனினும், கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், டெல்லி அணி வீரர்கள் தட்டுத் தடுமாறி ஒற்றை ரன்கள் ஓடினர். 4வது பந்தில் அமித் மிஸ்ரா ரன் ஓடும் போது, பந்தை தடுத்து பீல்டிங்கிற்கு இடைஞ்சலாக இருந்தார் என்று கூறி ரன் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கீமோ பால் ஃபோர் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவர்களில் டெல்லி அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி வெற்றிக்கு அருகே வந்தும், கேப்டனின் தவறான முடிவால், வெற்றியை கோட்டை விட்டது. டெல்லி அணி போராடி வெற்றிக் கோட்டை எட்டியது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

டெல்லி அணி தற்போது இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்.

Story first published: Thursday, May 9, 2019, 0:45 [IST]
Other articles published on May 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+