Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பந்திலேயே குழப்பமா? தவறான தீர்ப்பு கொடுத்த அம்பயர்.. ரிவ்யூ செய்து தப்பிய சாஹா!

விசாகப்பட்டினம் : 2019 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் தகுதி நீக்கப் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் முதல் பந்திலேயே அம்பயர் தவறான விக்கெட் தீர்ப்பு அளித்து அதிர்ச்சி அளித்தார்.

IPL 2019 SRH vs DC Eliminator : Umpire gave out on first ball but its a not-out

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியில் விரிதிமான் சாஹா - மார்டின் குப்டில் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ட்ரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை சாஹா சந்தித்தார். அந்த பந்து சாஹாவின் முட்டியில் பட்டு சென்றதை கண்ட பவுல்ட் மற்றும் டெல்லி அணியினர் எல்.பி.டபுள்யூ அவுட் கேட்டனர்.

1
45947

அம்பயர் ஆக்சன்போர்டு உடனே அவுட் கொடுத்துவிட்டார். சாஹா, எதிர்முனையில் இருந்த குப்டில்-இடம் பேசிவிட்டு ரிவ்யூ கேட்டார். ரீப்ளேவில், பந்து பேட்டில் எட்ஜ் ஆகிய பின்னரே காலில்படுவது தெரிந்தது. எனவே, அவுட் கொடுத்ததை திரும்பப் பெற்றார் அம்பயர்.

முதல் பந்திலேயே அம்பயருக்கு குழப்பமா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே அம்பயர் தான், சென்னை அணிக்கு மற்றொரு அம்பயர் கொடுத்த நோ-பாலை இல்லை என மறுத்தார். பின்னர், தோனி ஆடுகளத்துக்கு உள்ளே வந்து வாக்குவாதம் செய்தார்.

இதில் மற்றொரு குழப்பமும் உள்ளது. சாஹாவுக்கு எட்ஜ் ஆனது தெரிந்து இருந்தால், உடனடியாக ரிவ்யூ கேட்டிருப்பார். அவரும் காலில் பட்டதாகவே தான்நினைத்தாரா? அல்லது எட்ஜ் ஆனதை எதிர்முனை பேட்ஸ்மேனிடம் உறுதி செய்தாரா? என்பது தெரியவில்லை.

Story first published: Wednesday, May 8, 2019, 22:45 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+