யாராவது இவரை இந்த இடத்துல பேட்டிங் செய்ய அனுப்புவாங்களா? தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்!
Recommended Video
ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் மற்ற அணிகளை மிரட்டி வந்தது கொல்கத்தா. மூன்று போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது.
எனினும், பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த அணி 9 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகிறது.

தவறான முடிவுகள்
இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் எடுத்த தவறான முடிவு ஒன்றை சுட்டிக் காட்டி, கொல்கத்தா அணி தோற்று வருவதற்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுக்கும் தவறான முடிவுகள் தான் காரணம் என கூறி வருகின்றனர்.

கிறிஸ் லின் அரைசதம்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. துவக்க வீரர் கிறிஸ் லின் மட்டுமே நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

பேட்டிங் வரிசை
ஆனால், விக்கெட்கள் சரிந்து வந்த போது, அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ஐ பேட்டிங் செய்ய களமிறக்கவில்லை தினேஷ் கார்த்திக். ரஸ்ஸல் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது 5 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது.

4வது இடத்தில்..
அதனால், அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு ரஸ்ஸலுக்கு கிடைக்கவில்லை. 19வது ஓவர் வரை 9 பந்துகள் மட்டுமே சந்தித்த ரஸ்ஸல் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். போட்டிக்கு போட்டி அதிரடியாக ஆடி வரும் அவரை 4வது இடத்தில் இறக்கி இருந்தால் சரியாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு..
இதற்கு முன்பு நடந்த பெங்களூர் போட்டியில், 214 ரன்களை சேஸிங் செய்த போதும் ரஸ்ஸல் ஆறாவது வீரராகவே களம் இறங்கினார். அப்போதே, ரசிகர்கள் அவர் பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்க வேண்டும் என கூறினர்.

இன்னும் கீழே..
ஆனால், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்த முறை அவரை இன்னும் கீழே இறக்கி ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்ததால், ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications