Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி!

Recommended Video

IPL 2019: Hyderabad vs Kolkata | ஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமான நிலையில், ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

1
45914

கொல்கத்தா சிரமப்பட்டு 20 ஓவர்களில் சேர்த்த ரன்களை, ஹைதராபாத் அணி வார்னர், பேர்ஸ்டோ அதிரடியால் 15 ஓவர்களிலேயே வென்றது.

துவக்கம்

துவக்கம்

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் கிறிஸ் லின் 51, சுனில் நரைன் 25 ரன்கள் சேர்த்து அருமையான துவக்கம் அளித்தனர்.

தட்டுத் தடுமாறி…

தட்டுத் தடுமாறி…

ஷுப்மன் கில் 3, நிதிஷ் ராணா 11, தினேஷ் கார்த்திக் 6, ரிங்கு சிங் 30, ரஸ்ஸல் 15, பியுஷ் சாவ்லா 4. ப்ரித்வி ராஜ் 0*, கரியப்பா 9* ரன்கள் சேர்த்தனர். தட்டுத் தடுமாறி கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் 2, கலீல் அஹ்மது 3, சந்தீப் சர்மா, ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட களமிறங்கினர் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் வார்னர் - பேர்ஸ்டோ.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

வார்னர் - பேர்ஸ்டோ இருவரும் அதிரடியாக ஆடத் துவங்கினர். அவர்கள் விக்கெட்டை எடுக்கவும் முடியாமல், ரன் குவிப்பை தடுக்கவும் முடியாமல் திணறியது கொல்கத்தா. வார்னர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 80* ரன்கள், வில்லியம்சன் 8* ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை 15வது ஓவரில் வெற்றி பெறச் செய்தனர்.

கொல்கத்தா பின்தங்கியது

கொல்கத்தா பின்தங்கியது

கொல்கத்தா அணி தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தோல்வியுடன் அந்த அணி 10 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.

Story first published: Sunday, April 21, 2019, 21:47 [IST]
Other articles published on Apr 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+