Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எகிறி குதித்த அஸ்வின்.. கையில் சிக்கிய பந்து.. ஆனா கடைசில இப்படி ஆயிடுச்சே.. ஏமாந்த ஷமி!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய 48வது ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் அருமையாக பந்து வீசினார்.

அதே போல, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார் அஸ்வின். ஆனால், அவர் செய்த ஒரு கடின கேட்ச் முயற்சி கைக்கு கிடைத்தது போல் கிடைத்து பின்னர் நழுவியது.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. வார்னர் பட்டையைக் கிளப்பி ஆடி வந்தார். அவருடன் மனிஷ் பாண்டேவும் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார். அப்போது தான் அந்த கேட்ச் வாய்பி கிடைத்தது.

ஒற்றைக் கையில்..

ஒற்றைக் கையில்..

11வது ஓவரின் முதல் பந்தை மனிஷ் பாண்டே எதிர்கொண்டார். ஷமி பந்தை வீசினார். மிட்-ஆஃப் திசையில் அஸ்வின் பீல்டிங் நின்று இருந்த இடத்துக்கு மேலே பந்தை தூக்கி அடித்தார் மனிஷ். அஸ்வின் ஒரே குதியாக குதித்து பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார்.

நழுவிய பந்து

நழுவிய பந்து

ஆனால், பிடித்துவிட்டு கீழே கால்களை வைப்பதற்குள், பந்து கை நழுவியது. எனினும், பந்து பவுண்டரி போவதை தடுத்து விட்டார் அஸ்வின். ஷமி கேட்ச் பிடித்துவிட்டார் என மகிழ்ச்சியில் இருந்து, அடுத்த நொடியில் ஏமாற்றம் அடைந்தார்.

பாண்டேவுக்கு கிடைத்த வாய்ப்பு

பாண்டேவுக்கு கிடைத்த வாய்ப்பு

கேட்ச் நழுவியதால், மனிஷ் பாண்டே ஒரு வாய்ப்பு பெற்றார். அப்போது 20 ரன்கள் அடித்து இருந்த மனிஷ் பாண்டே பின்னர் 36 ரன்கள் வரை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 212 ரன்கள் குவித்தது.

Story first published: Monday, April 29, 2019, 23:13 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+