Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓடிப் போய்.. காலால் பீல்டிங் செய்து.. காமெடி பண்ணிய கிறிஸ் கெயில்.. கடுப்பான ரசிகர்கள்!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் கிறிஸ் கெயில் செய்த பீல்டிங் செம காமெடியாக இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து வந்தது. 17 ஓவர்களில் 169 ரன்கள் எட்டியது அந்த அணி.

முஜீப் ஓவரில்..

முஜீப் ஓவரில்..

18வது ஓவரின் முதல் பந்தை கேன் வில்லியம்சன் எதிர்கொண்டார். ஏற்கனவே, 3 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து சோகத்தில் இருந்த முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தை வில்லியம்சன் அடித்தார்.

தடுக்க முயன்றார்

தடுக்க முயன்றார்

பந்தை பிடிக்க கிறிஸ் கெயில் மிக வேகமாக ஓடி வந்தார். பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு பந்துக்கு அருகே வந்தார் கெயில். எப்படியும் பந்தை பிடித்து விடுவார் என பார்த்தால், காலால் பந்தை தடுக்க முயன்றார் கெயில்.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

ஆனால், கெயில் ஓடி வந்த வேகத்தில் பந்தை தடுப்பதற்கு பதில் எட்டி விட்டார். பந்து வேகமாக பவுண்டரியை கடந்து ஃபோர் ஆனது. ஏற்கனவே, ஹைதராபாத் அடித்து, துவைத்து வந்த நிலையில், கெயில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

சோகத்தில் முஜீப்

சோகத்தில் முஜீப்

இதைக் கண்ட பஞ்சாப் ரசிகர்கள் கடுப்பானார்கள். அதை விட சோகம், முஜீப் வீசிய அந்த 18வது ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத். இது ஒரு புறமிருக்க, 213 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து கடும் அதிர்ச்சி அளித்தார்.

Story first published: Monday, April 29, 2019, 23:47 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+