Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசியா ஒரு காட்டு காட்டிட்டுப் போன வார்னர்! பயந்து.. பதுங்கி.. சேஸிங் செய்த அஸ்வின் அணி!!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் மோசமாக ஆடி, பரிதாபமாக தோல்வி அடைந்தது.

1
45924

இரண்டு அணிகளுமே பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகாத நிலையில் இருந்ததால், இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதே போல, வார்னர் இந்த சீசனில் ஆடும் கடைசி போட்டி இதுதான். அவர் கிளம்பி விட்டால், ஹைதராபாத் அணியின் நிலைமை கவலைக்கிடம் ஆகி விடும் என்பதால், அவர் இருக்கும் போதே அதிக வெற்றிகளை பெற்று விடும் எண்ணத்தில் இருந்தது ஹைதராபாத்.

ஹைதராபாத் பேட்டிங்

ஹைதராபாத் பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அஸ்வின், ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். ஹைதராபாத் அணிக்கு விரிதிமான் சாஹா - டேவிட் வார்னர் துவக்கம் அளித்தனர். இருவரும் துவக்கம் முதல் பந்துகளை பறக்க விட்டனர்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை செய்தது இந்த ஜோடி. சாஹா 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து மனிஷ் பாண்டே 36, நபி 20, வில்லியம்சன் 10 ரன்கள் எடுத்தனர்.

வார்னர் 81

வார்னர் 81

டேவிட் வார்னர் 56 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 212 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி தன் பந்துவீச்சில் 20 இதர ரன்கள் கொடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தது. இதற்கு முக்கிய காரணம் இளம் அறிமுக வீரரான சிம்ரன் சிங்கின் விக்கெட் கீப்பிங் சொதப்பல் மற்றும் முஜீப் உர் ரஹ்மானின் வைடுகள்.

வாரி இறைத்த இருவர்

வாரி இறைத்த இருவர்

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். ஷமி ஓரளவு ஓவருக்கு 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அர்ஷ்தீப் சிங் (ஓவருக்கு 10.50) மற்றும் முஜீப் உர் ரஹ்மான் (ஓவருக்கு 16.50) ரன்களை வாரி இறைத்தனர்.

கைவிட்ட கெயில்

கைவிட்ட கெயில்

பஞ்சாப் அணி பந்துவீச்சில் தான் சொதப்பியது. பேட்டிங்கில் கெயில், ராகுல் கை கொடுத்தால் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்தார்.

விக்கெட்கள் சரிவு

விக்கெட்கள் சரிவு

ஆனால், ராகுலுக்கு யாரும் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ராகுலும் 13 ஓவர் வரை 36 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். 213 ரன்கள் இலக்கை துரத்தும் போட்டியில், மிக நிதானமாக ஆடத் துவங்கி விக்கெட்கள் சரியத் துவங்கிய பின் வேகத்தை கூட்டினார்.

ராகுல் நிதானம் ஏன்?

ராகுல் நிதானம் ஏன்?

ராகுல் வேகத்தை கூட்டும் முன் 5 விக்கெட்களை இழந்தது பஞ்சாப். இப்படி ராகுல் பம்மி, பம்மி ஆட முக்கிய காரணம் ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு. மாயங்க் அகர்வால் 27, பூரன் 21, மில்லர் 11, அஸ்வின் 0, சிம்ரன் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் 56 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பஞ்சாப் தோல்வி

பஞ்சாப் தோல்வி

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 167 ரன்கள் மட்டுமே சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பஞ்சாப் அணி. ரஷித் கான், கலீல் அஹ்மது தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஹைதராபாத் அணி இந்தப் போட்டியின் வெற்றி மூலம் ஆறு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Story first published: Tuesday, April 30, 2019, 0:38 [IST]
Other articles published on Apr 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+