For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH vs RR:முதல் ஆட்டத்தில் தோல்வி... இன்று வெற்றி கணக்கை துவங்குவது யார்?

ஹைதராபாத்:ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளன.

ராஜஸ்தான் அணி, தமது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் மன்கட் அவுட் முறையில் பட்லர் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, தோல்வியில் இருந்து அணியை மீட்கும் நம்பிக்கையுடன் கேப்டன் ரகானே களம் இறங்குவார்.

காத்திருக்கும் பட்லர்

காத்திருக்கும் பட்லர்

கடந்த போட்டியில் சிறந்த முறையில் விளையாடிய பட்லர், இந்த முறையும் அதே ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறலாம். ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் கை கொடுக்கக்கூடும் என்று தெரிகிறது.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

பந்து வீச்சில் தவல் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், பென் ஸ்டோக்ஸ், ஜெய் தேவ் உனத்கட் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டும். ஜோப்ரா ஆர்ச்சர் இன்று சிறப்பான முறையில் பந்துவீசுவார் என்று ரசிகர்கள் நம்பி இருக்கின்றனர்.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

ராஜஸ்தானை போன்றே முதல் போட்டியில் தோல்வி கண்ட ஹைதராபாத் அணி இம்முறை வெற்றி காணும் என்று நம்பலாம். தொடக்க வீரர் டேவிட் வார்னர், அபார பேட்டிங் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கூடுதல் பொறுப்பு

கூடுதல் பொறுப்பு

பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர் ஆகியோர் உள்னனர். பவுலிங்கில் ஹைதராபாத் அணி ரஷித் கான், புவனேஸ்வர் குமார் கூடுதல் பொறுப்புடன் விளையாடுவார்க்ள்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

கடந்த போட்டியில் இறுதி ஓவரில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் கை கொடுக்க வில்லை. மேலும் உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் புவனேஷ்வர் குமார் தமது பந்து வீச்சை மேலும் பட்டை தீட்டுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

Story first published: Friday, March 29, 2019, 9:59 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
In Match 8 of IPL 2019 Rajasthan Royals will look to turn fortunes when they lock horns Sunrisers Hyderabad at Rajiv Gandhi International Stadium in Hyderabad on Friday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+