Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி கொடியை நாட்டுமா கொல்கத்தா..... ! ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது.

சேப்பாக்கத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது வெற்றி நடையை தொடர்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் துவங்கும் 2வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடந்த தொடரில் இரு அணிகளும் டாப் 4 இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

அடிபணிந்தது

அடிபணிந்தது

கொல்கத்தா அணி குவாலிபயர் 2வது போட்டியில் ஹைதராபாத்திடம் வீழ்ந்தது. ஹைதராபாத் அணி, பைனலில் சென்னையிடம் அடிபணிந்தது.

அணிக்கு பலம்

அணிக்கு பலம்

ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் நட்சத்திர துவக்க வீரர் வார்னரின் வருகை அந்த அணிக்கு பலமாக உள்ளது. இருந்தாலும் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் இதுதான்

நேரம் இதுதான்

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், பெஞ்ச் பலத்தை சோதிக்க இதுவே சரியான நேரம். பெர்குசான், ஹேரி கர்னே என வேகப்பந்துவீச்சில் சாதிக்க பல பவுலர்கள் தயாராக இருக்கின்றனர்.

அணியின் வரலாறு

அணியின் வரலாறு

ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 15 முறை மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 9 முறை வென்றுள்ளது. ஹைதராபாத் அணி 6 முறை வென்றுள்ளது. இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடப்பதால் கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

என்ன சாதனைகள்?

என்ன சாதனைகள்?

கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனுக்கு சாதனை காத்திருக்கிறது. அவர் 1 விக்கெட் கைப்பற்றினால், ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது 50வது விக்கெட்டை கைப்பற்றுவார்.

அற்புதம் ரசித்

அற்புதம் ரசித்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் ஹைதராபாத் அணியின் ஆப்கான் வீரர் ரசித் கான், 47 போட்டியில் பங்கேற்று அதிகபட்சமாக 81 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இன்றும் தமது விக்கெட் வேட்டையை அவர் தொடருவார் என்று நம்பலாம்.

Story first published: Sunday, March 24, 2019, 14:28 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+