Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரை ரொம்ப பிடிக்கும்?.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யாவிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டு பதில் பெற்றுள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

நடிகர் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் வரும் மே 31 அன்று திரைக்கு வரவுள்ளது. அதையொட்டி, அவர் ட்விட்டர் தளத்தில் நேரலையில் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

IPL 2019 : Suresh Raina asks question to Actor Suriya in Twitter

அப்போது எதிர்பாராவிதமாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, "சிஎஸ்கே அணியில் எந்த வீரரை உங்களுக்கு பிடிக்கும்? ஏன்?" என கேள்வி எழுப்பினார். முதலில் இந்த கேள்வியை கண்ட போது, ஏதும் ரெய்னா என்ற பெயர் வைத்துள்ள யாரோ ஒருவர் கலாய்க்கிறாரோ என்று தான் தோன்றியது.

அப்புறம் பார்த்தால், உண்மையாகவே சுரேஷ் ரெய்னா தான் இப்படி கேள்வி கேட்டுள்ளார் என தெரிந்தது. ரெய்னாவின் கேள்விக்கு சூர்யா பதில் அளித்தார். முதலில், "உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கா?" என ஆச்சரியம் காட்டிய சூர்யா அடுத்து கேள்விக்கு போனார்.

"நான் இந்த கேள்விக்கு ஒருதலையாக பதில் சொல்ல விரும்பவில்லை. நான் பெயரை சொல்கிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். மிஸ்டர்.மாஹி.. தோனி.. ஏனென்றால், அவரைத்தான் அணியில் நான் முதலில் சந்தித்தேன். அதன் பின், உங்களையும் சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்றார் சூர்யா.

பின்னர், "இன்னும் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி. கடந்த (ஐபிஎல்) சீசனை ரசித்துப் பார்த்தேன். எப்போதும் சிஎஸ்கே ரசிகன்" என முடித்தார் சூர்யா.

Story first published: Tuesday, May 21, 2019, 14:57 [IST]
Other articles published on May 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+