Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றி மட்டுமே என்னிடம் உள்ளது.. சென்னை ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா!!

Recommended Video

சென்னை ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த ரெய்னா!

சென்னை : 2019 ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. சென்னை அணியின் பயிற்சியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி செய்ய மைதானத்தின் உள்ளே நுழைந்த போது, சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதைக் கண்டு மனம் நெகிழ்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

நன்றி

"வாழ்வில் சில கணங்கள் இதயத்துக்கு மிக அருகே இருக்கும். நன்றி மட்டுமே என்னிடம் உள்ளது" என சென்னை ரசிகர்கள் அளித்த வரவேற்பு பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ரெய்னா.

நன்றி

"வாழ்வில் சில கணங்கள் இதயத்துக்கு மிக அருகே இருக்கும். நன்றி மட்டுமே என்னிடம் உள்ளது" என சென்னை ரசிகர்கள் அளித்த வரவேற்பு பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ரெய்னா.

இரு ஆண்டுகள் தடை

இரு ஆண்டுகள் தடை

சிஎஸ்கே அணி இரு ஆண்டுகள் தடைக்குப் பின் கடந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது. அப்போது சற்றும் குறைவில்லாமல் சென்னை ரசிகர்கள் அந்த அணிக்கு வரவேற்பு அளித்தனர்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

சென்னை அணி மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற போது தோனி மட்டுமில்லாமல், சுரேஷ் ரெய்னாவுக்கும் சென்னை ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அது இந்த ஆண்டும் தொடர்கிறது.

சின்ன தல ரெய்னா

சின்ன தல ரெய்னா

தோனியை தல என அழைக்கும் ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் அன்புக்கு மதிப்பளிக்கும் வகையில், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தன் சாதனையை தொடர்ந்து வருகிறார்.

ரெய்னாவின் மைல்கல்

ரெய்னாவின் மைல்கல்

இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை தொடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு இன்னும் 15 ரன்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டி

முதல் போட்டி

சிஎஸ்கே அணி வரும் மார்ச் 23 அன்று 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்க உள்ளது. அந்த போட்டியிலேயே ரெய்னா தன் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவாரா?

Story first published: Tuesday, March 19, 2019, 9:59 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+