Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்!

சிட்னி : கடந்த இரண்டு - மூன்று நாட்களாக தனக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஷேன் வாட்சன்.

2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் முட்டியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய, கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்தார்.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் ஷேன் வாட்சன் ரன் அவுட் ஆனார். அதன் பின் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால், சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

தகவல் அளித்த ஹர்பஜன்

தகவல் அளித்த ஹர்பஜன்

போட்டி முடிந்த மறுநாள், ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில், ஷேன் வாட்சன் ரத்தம் வழிய, வழிய கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்துள்ளார். அவருக்கு பீல்டிங் செய்யும் போதே முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.

6 தையல்கள்

6 தையல்கள்

ஆனால், அதை வெளியே கூறாமல் இருந்து, பேட்டிங் செய்துள்ளார். போட்டி முடிந்த பின் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன என கூறினார் ஹர்பஜன் சிங். இந்த செய்தி, சிஎஸ்கே ரசிகர்கள் இடையே தீயாக பரவ, வாட்சனை புகழ்ந்தும், காயம் குறித்தும் வருத்தமடைந்தும் மீம்ஸ்கள் பறந்தன.

நன்றி

ஐபிஎல் தொடர் ஓய்ந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை விட அதிக தாக்கத்துடன் வாட்சன் ரத்தம் வழிய பேட்டிங் செய்தது டிரென்டிங் ஆனது. இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி கூறி, அடுத்த வருடம் இன்னும் ஒரு அடி வைத்து வெற்றிக் கோட்டை எட்டுவோம் என நம்பிக்கை கூறியுள்ளார்.

வாட்சன் ஓய்வு?

வாட்சன் ஓய்வு?

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் இருந்து வாட்சன் ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரிலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகள் இருந்தன, அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து, அடுத்த ஆண்டு சந்திப்போம் என கூறியுள்ளார் வாட்சன்.

Story first published: Thursday, May 16, 2019, 15:49 [IST]
Other articles published on May 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+