For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் வரிசை.. சிஎஸ்கே-வின் மூன்று சிறந்த ஆல்-ரவுண்டர்கள் யார்?

சென்னை : 2019 ஐபிஎல் தொடருக்கான ஆயத்தங்கள் களைகட்டத் துவங்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் துவக்க காலம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருவது ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே. எந்த அணி சிறந்த ஆல்-ரவுண்டர்களை வைத்துள்ளதோ அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பும் அதிகம்.

2019 ஐபிஎல் தொடரில் கலக்க உள்ள முக்கிய ஆல்-ரவுண்டர் வரிசையில் மூன்று வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்கள். இரண்டு வீரர்கள் கொல்கத்தா அணியை சேர்ந்தவர்கள். ஹைதராபாத் மற்றும் மும்பை அணியை சேர்ந்த தலா ஒரு வீரரும் உள்ளனர்.

அவங்க கூட கோலியை ஒப்பிடாதீங்க.. அவர் ஐபிஎல் ஜெயிச்சா பார்க்கலாம்.. கம்பீர் கடும் விமர்சனம்!! அவங்க கூட கோலியை ஒப்பிடாதீங்க.. அவர் ஐபிஎல் ஜெயிச்சா பார்க்கலாம்.. கம்பீர் கடும் விமர்சனம்!!

ஷகிப் அல் ஹசன்

ஷகிப் அல் ஹசன்

சன்ரைசர்ஸ் அணி கடந்த ஆண்டு சிறப்பாக ஆடியதில் இவரது பங்கும் அதிகம். இதுவரை 60 ஐபிஎல் போட்டிகளில் 737 ரன்கள், 57 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். பேட்டிங்கில் பல முறை தன் அணிக்கு கை கொடுத்துள்ளார் இவர். இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

சூப்பர் சுனில் நரைன்

சூப்பர் சுனில் நரைன்

சுனில் நரைன் பந்துவீச்சாளராக மட்டுமே அறியப்பட்ட நிலையில், திடீரென கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரராக மாறி அதிரடி காட்டினார். 98 போட்டிகளில் 628 ரன்கள், 112 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் நரைன். 2௦18 ஆண்டு மட்டும் 16 போட்டிகளில் 357 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

கொல்கத்தா அணியின் மற்றொரு சூப்பர் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல். இவர் 50 போட்டிகளில் 890 ரன்கள், 44 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 316 ரன்கள் எடுத்தார் ரஸ்ஸல்.

கீரான் பொல்லார்டு

கீரான் பொல்லார்டு

மும்பை அணியின் முக்கிய வீரராக பில்டப் கொடுக்கப்பட்டு வருபவர். துவக்க காலத்தில் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 132 போட்டிகளில் 2476 ரன்கள், 56 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு பேட்டிங்கில் சென்னை அணிக்கு கை கொடுக்காவிட்டாலும், பந்துவீச்சில் கை கொடுத்தார். இதுவரை 154 போட்டிகளில் 1821 ரன்கள், 93 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் ஜடேஜா.

டிவைன் பிராவோ

டிவைன் பிராவோ

சென்னை அணியின் முக்கியஆல்-ரவுண்டர் இவர் தான். தோனியின் நம்பகமான பந்துவீச்சாளர்களில் முதல் இடம் இவருக்கு உண்டு. பேட்டிங்கிலும் தேவையான நேரங்களில் அதிரடி காட்டுவார் பிராவோ. இதுவரை ஐபிஎல் தொடரில் 122 போட்டிகளில் 1379 ரன்கள், 136 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் பிராவோ.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்றால் அது ஷேன் வாட்சன் தான். பல அணிகளில் இருந்து விட்டு தற்போது சென்னை அணியில் இருக்கும் வாட்சன், கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பை வென்றதில் பெரும் பங்கு வகித்தார். இதுவரை 117 போட்டிகளில் 3177 ரன்கள் மற்றும் 92 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார், இந்த சிறந்த ஆல்-ரவுண்டர்.

Story first published: Tuesday, March 19, 2019, 14:36 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
IPL 2019 : Who are the best all rounders in IPL?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X