For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் அதிக ஃபோர் அடித்த வீரர் யாருன்னு தெரியுமா? ரெய்னாவும் இல்லை.. கோலியும் இல்லை!!

மும்பை : ஐபிஎல் தொடர் என்றாலே அதிரடி தான். அதிலும் சிக்ஸர் தான் எல்லோர் நினைவுக்கும் வரும். கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், தோனி என அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களும் நம் நினைவுக்கு வருவார்கள்.

ஆனால், ஐபிஎல் தொடரில் அதிக ஃபோர் அடித்த பேட்ஸ்மேன் யார்? என்று கேட்டால் சிலருக்குத் தான் தெரியும். அந்த பட்டியலில் இருக்கும் டாப் - 5 வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

#5 ராபின் உத்தப்பா

#5 ராபின் உத்தப்பா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நீண்ட காலமாக ஆடி வரும் அதிரடி வீரர் ராபின் உத்தப்பா 158 இன்னிங்க்ஸ்களில் 401 ஃபோர் அடித்து, இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 4086 ரன்கள் குவித்துள்ளார். அதில் 1604 ரன்கள் ஃபோர் மூலம் கிடைத்தவை.

#4 விராட் கோலி

#4 விராட் கோலி

விராட் கோலி இந்த பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளார். கோலி 434 ஃபோர் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கோலி எடுத்த 4948 ரன்களில் 1736 ரன்கள் ஃபோரில் கிடைத்தவை.

#3 சுரேஷ் ரெய்னா

#3 சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த ரெக்கார்டை வைத்திருக்கும் சுரேஷ் ரெய்னா, அதிக ஃபோர் அடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர் 448 ஃபோர் அடித்துள்ளார். ரெய்னா சேர்த்த 4985 ரன்களில், 1792 ரன்கள் ஃபோர் மூலம் கிடைத்தவை.

#2 ஷிகர் தவான்

#2 ஷிகர் தவான்

இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஷிகர் தவான். இடது கை துவக்க வீரரான தவான் 460 ஃபோர் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் அடித்த 4058 ரன்களில், 1840 ரன்கள் ஃபோர் அடித்ததன் மூலம் கிடைத்துள்ளது.

#1 கௌதம் கம்பீர்

#1 கௌதம் கம்பீர்

2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்காத கௌதம் கம்பீர் தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கம்பீர் 491 ஃபோர் அடித்துள்ளார். அவர் 152 இன்னிங்க்ஸ்களில் 4217 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஃபோர் மூலம் மட்டும் 1964 ரன்கள் கிடைத்துள்ளது. இவரது முதல் இடத்தை ஷிகர் தவான் இந்த ஆண்டு பறித்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, March 22, 2019, 16:54 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
IPL 2019 : Who hit most fours in IPL history?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+