Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே வீணாப் போச்சே.. சோகத்தில் மூழ்கிய ஹர்திக் பாண்ட்யா.. குஜராத்திற்கு ஷாக் கொடுத்த ஐதராபாத் அணி

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்யான இது மும்பை DY பாட்டில் மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்கமே சொதப்பல்

தொடக்கமே சொதப்பல்

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் களமிறங்கிய மேத்யூவ் வேட் 19 ரன்கள், சுப்மன் கில் 7, சாய் சுதர்சன் 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 64 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கேப்டன் இன்னிங்ஸ்

கேப்டன் இன்னிங்ஸ்

இதன் பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அபினவ் மனோகர் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய பாண்ட்யா

42 பந்துகளில் 50 ரன்களும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் இந்த முறையும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் ஜோடி அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இதனால் ஐதராபாத் அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பலமான நிலையில் இருந்தது.

முதல் தோல்வி

முதல் தோல்வி

இதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரண் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை விளாசினார். இதனால் 19.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

Story first published: Monday, April 11, 2022, 23:52 [IST]
Other articles published on Apr 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+