For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 தவறுகள்.. தோனி கேப்டன்சிக்கு இவ்ளோதான் என்னோட மார்க்.. அதிர வைத்த சேவாக்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய போது பலரும் அந்த அணியை புகழ்ந்து தள்ளினர்.

கேப்டன் தோனி கேப்டன்சியில் மீண்டும் முத்திரை பதித்தார், சரியான அணியை தேர்வு செய்தார், தன் பேட்டிங் வரிசையை இளம் வீரர்களுக்கு அளித்தார் என்றெல்லாம் தோனியை பாராட்டினார்கள்.

ஆனால், அந்த அணியின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில், அந்த பாராட்டுக்கள் அப்படியே காணாமல் போய் தோனி மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது. முன்னாள் இந்திய வீரர் சேவாக் தோனியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளவே முடியாது.. என்ன ஏற்றுக்கொள்ளவே முடியாது.. என்ன "நான்சென்ஸ்" இது.. தோனியை கடுமையாக விமர்சித்த பீட்டர்சன்.. பரபரப்பு!

முதல் போட்டி

முதல் போட்டி

சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது. மும்பை அணி அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 162 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் அந்த இலக்கை சேஸிங் செய்து முடித்தது.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி ஆடியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோனி எடுத்த முடிவு

தோனி எடுத்த முடிவு

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்ஸர்களாக பறக்க விட்டுக் கொண்டு இருந்த போது தோனி மீண்டும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கே ஓவர் அளித்து சொதப்பி இருந்தார்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

அடுத்து சேஸிங்கில் அதிரடி வீரர்களை முதலில் ஆட வைக்காமல் கேதர் ஜாதவ்வை இறக்கினார். அது மட்டுமின்றி, பாப் டுபிளெசிஸ் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பேச்சை கேட்டு துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி பின் வேகம் எடுத்தார். ஆனால், அதற்குள் தேவைப்படும் ரன் ரேட் எகிறியது.

கடைசி ஓவர் சிக்ஸர்கள்

கடைசி ஓவர் சிக்ஸர்கள்

தோனி ஏழாம் இடத்தில் பேட்டிங் இறங்கி ஓவருக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் சிங்கிள் ரன்கள் எடுத்து ஆடினார். கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில், மூன்று ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார்.

சேவாக் விளாசல்

சேவாக் விளாசல்

தோனியின் இந்த மோசமான முடிவுகள் மற்றும் பேட்டிங்கை பலரும் விளாசி வரும் நிலையில், முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தன் பாணியில் விளாசி உள்ளார். தோனி கேப்டன்சியில் இரண்டு தவறுகள் உள்ளதாகக் கூறி, மார்க்கும் போட்டு விமர்சனம் செய்துள்ளார்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

சாம்சன் சுழற் பந்துவீச்சாளர்களை விளாசிய போது ஜடேஜா, பியுஷ் சாவ்லாவுக்கு மீண்டும் ஓவர்கள் கொடுத்தது தவறு எனக் கூறிய சேவாக், சாம் கர்ரன் ஆட்டமிழந்த பின் தோனி தானோ அல்லது ஜடேஜாவையோ பேட்டிங் ஆட இறக்கி இருக்க வேண்டும். ஜாதவ்வை இறக்கி இருக்கக் கூடாது என்றார்.

3 சிக்ஸர்கள்

3 சிக்ஸர்கள்

மேலும், கடைசி ஓவரில் 30 ரன்களுக்கும் மேல் தேவை எனும் நிலையில் அடித்த மூன்று சிக்ஸர்கள் சிஎஸ்கே அணி வெற்றிக்கு அருகே வந்தது போல காட்டினாலும், அது தேவையற்றது. அதை தோனி டாட் பால் ஆடாமல் முன்பே செய்திருந்தால் மக்கள் அதை பாராட்டி இருப்பார்கள் என்றார்.

நாலு மார்க்

நாலு மார்க்

தோனி இரண்டு தவறுகள் செய்துள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களை சாம்சனுக்கு பந்து வீச வைத்தது. தன் பேட்டிங் ஆர்டரை மாற்றி கீழே இறங்கி ஆடியது இரண்டும் தவறு. தோனி கேப்டன்சிக்கு நான் மதிப்பிட வேண்டும் என்றால் 10க்கு 4 தான் கொடுப்பேன் என்றார் சேவாக்.

Story first published: Thursday, September 24, 2020, 16:45 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020 News in Tamil : 2 errors in Dhoni captaincy says Virender Sehwag. He points out giving overs to spinners while Samson was hitting sixes is a mistake.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X