For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே, ஆர்சிபிக்கு நோ சான்ஸ்.. இந்த 4 டீம் தான் பிளே-ஆஃப் போகும்.. அதிர வைக்கும் கணிப்பு!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இதன் முடிவில் எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், எந்த அணிகள் பிளே-ஆஃப் செல்லும் என பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி என கூறி வந்த பலரும் கூட இப்போது அது நடக்கவே நடக்காது என கூறி வருகின்றனர்.

எந்த நான்கு அணிகள்?

எந்த நான்கு அணிகள்?

முன்னாள் வீரர் அஜித் அகர்கர் எந்த நான்கு அணிகள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தன் கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடத்தில் கூட இடம் பெறாது என கணித்து அதிர வைத்துள்ளார்.

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியல்

சிஎஸ்கே - ஹைதராபாத் போட்டி வரை 2020 ஐபிஎல் புள்ளிப் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் 10 புள்ளிகளுடன் இரண்டாம், மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத், சிஎஸ்கே அணிகள் எட்டு போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்று ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இரண்டு டாப் அணிகள்

இரண்டு டாப் அணிகள்

இந்த நிலையில் அஜித் அகர்கர் தன் கணிப்பு குறித்து கூறுகையில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தான் சிறந்தா அணிகளாக காட்சி அளிக்கின்றன. பார்ம் மற்றும் வீரர்கள் வகையில் அந்த அணிகள் முன்னிலையில் உள்ளன என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு போனஸ் வெற்றியை பெற்றுள்ளது. அந்த அணியை நான் மூன்றாம் இடத்தில் வைத்துள்ளேன் என்றார் அகர்கர். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

நான்காம் இடம் யாருக்கு?

நான்காம் இடம் யாருக்கு?

நான்காம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இடம் பெறும். தொடரின் துவக்கத்தில் நான் சிஎஸ்கே அணியை முதல் நான்கு இடத்தில் வைத்திருந்தேன். ஆனால், தற்போது இந்த இரண்டு அணிகள், சிஎஸ்கேவை விட முன்னிலையில் உள்ளன என்றார்.

பெங்களூர் இல்லை

பெங்களூர் இல்லை

இந்த நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் போகும் என கணித்த அகர்கர், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பிளே-ஆஃப் போக வாய்ப்பே இல்லாத அணியாக கருதி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

முதல் ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகளை அடைந்துள்ள சிஎஸ்கே அணி, பிளே-ஆஃப் வாய்ப்பு குறைவாக இருக்கும் அணியாக கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அஜித் அகர்கர் சிஎஸ்கே அணிக்கு முதல் நான்கு இடங்களில் வாய்ப்பு அளிக்கவில்லை.

Story first published: Wednesday, October 14, 2020, 20:02 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL 2020 News in Tamil : Ajit Agarkar picks Mumbai Indians, Delhi Capitals as best teams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+