யாரையும் கிஸ் பண்ணக் கூடாது.. ஐபிஎல் கிளம்பும் முன் அஸ்வின் மனைவி போட்ட உத்தரவு.. வைரல் வீடியோ!
சென்னை : கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் ஆட ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளார்.
Recommended Video
அதற்கு முன்னதாக அவரது இரண்டு மகள்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாடம் நடத்தி உள்ளனர்.
அந்த வீடியோவில் அஸ்வின் மனைவி போட்ட உத்தரவு ஒன்று ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்க இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் காரணமாக அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

எச்சரிக்கை வீடியோ
அஸ்வின் அப்போது கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமூக வலைதளங்களில் மற்ற கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுத்தும் வந்தார். இதனிடையே பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி செய்து வந்தது.

மீண்டும் ஐபிஎல்
2020 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

அறிவுரைகள்
அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்களை ஒன்று திரட்டி தனி விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பி வருகின்றன. டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆட உள்ள அஸ்வினும் சென்றுள்ளார். அவர் சென்னையில் இருந்து கிளம்பும் முன் அவருக்கு வீட்டில் செமயாக அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன.

கட்டி அணைக்கக் கூடாது
அஸ்வினின் இரண்டு மகள்களும் வெளிநாடு கிளம்பும் அஸ்வினுக்கு முகக் கவசம் அணிந்து கொண்டே பாடம் நடத்தி உள்ளனர். முதலில் யாரையும் கட்டி அணைக்கக் கூடாது என அவரது மகள்கள் கூற, சரி என தலையாட்டினார் அஸ்வின்.

கிஸ் பண்ணக் கூடாது
அதன் பின் என்ன? என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி கேட்க, அவரது மகள்கள் அவ்வளவு தான் என்கிறார்கள். ஆனாலும், வம்படியாக "யாரையும் கிஸ் பண்ணக் கூடாது" என ப்ரீத்தி அஸ்வினுக்கு உத்தரவு போட்டார். அதன் பின் மகள்கள் தங்கள் அறிவுரைகளை தொடர்ந்தனர்.

தொடக் கூடாது
எதையும் தொடக் கூடாது என அவர்கள் அஸ்வினுக்கு கூற, இதற்கு மேல் தாங்காது என எழுந்து ஓடி விட்டார் அஸ்வின். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆட உள்ள அஸ்வின், கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிங் எச்சரிக்கை
கடந்த சீசனில் மன்கட் ரன் அவுட் செய்த அஸ்வினுக்கு டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்த முறை அதை செய்ய விட மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளதும் ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications