Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுக்கு இந்திய வர்ணனையாளர்களும் ரெடிங்கோ... அட்டவணை வெளியிடறது மட்டும்தான் பாக்கி

டெல்லி : ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ளநிலையில் பல்வேறு வகைகளில் அணி வீரர்களும் பிசிசிஐயும் தயாராகி வருகின்றது.

Recommended Video

CSK Players test Negative, likely to play with Mumbai Indians in Opener | OneIndia Tamil

இன்றைக்கு ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படவுள்ள நிலையில், தற்போது போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வர்ணனையாளர்கள் 7 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது பிசிசிஐ.

இதில் கிரிக்கெட் வர்ணைனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகரின் பெயர் இடம்பெறவில்லை. தன்னுடைய செயல்களுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்த நிலையிலும் அவருக்கும் இதில் இடம் கிடைக்கவில்லை.

பயிற்சிகளை துவக்கும் சிஎஸ்கே

பயிற்சிகளை துவக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐபிஎல் அணிகள் தங்களை வெகு தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ள நிலையில் இன்றுமுதல் அவர்கள் தங்களது பயிற்சிகளை துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்ணனையாளர்கள் அறிவிப்பு

இந்திய வர்ணனையாளர்கள் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு விஷயமும் பிசிசிஐயால் தெளிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் போட்டிகளின் அட்டவணை பிசிசிஐயால் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். முன்னதாக தற்போது போட்டிகளில் பங்கேற்கும் 7 இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகீரங்க மன்னிப்பு கேட்டும் பலனில்லை

பகீரங்க மன்னிப்பு கேட்டும் பலனில்லை

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், அவரது மகன் ரோஹன் கவாஸ்கர், லஷ்மன் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப் தாஸ்குப்தா, ஹர்ஷா போக்ளே, அஞ்ஜூம் சோப்ரா ஆகிய 7 வர்ணனையாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் மஞ்ச்ரேகரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. தன்னுடைய வர்ணனை குறித்து அவர் பகீரங்க மன்னிப்பு கோரிய நிலையிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இரண்டு பிரிவாக வர்ணனை

இரண்டு பிரிவாக வர்ணனை

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 7 வர்ணனையாளர்களும் இரண்டாக பிரிக்கப்பட்டு தாஸ்குப்தா மற்றும் கார்த்திக் உள்ளிட்ட வர்ணனையாளர்களை கொண்ட ஒரு பிரிவினர் அபுதாபியில் நடைபெறும் போட்டிகளுக்கும் மற்றவர்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் போட்டிகளுக்கும் வர்ணனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, September 4, 2020, 17:45 [IST]
Other articles published on Sep 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+