Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வாரத்தில் 4 முறை கொரோனா பரிசோதனை.. வெளியே போனா உள்ளே வர முடியாது.. மிரள வைக்கும் ஐபிஎல்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ள வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளின் பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பிசிசிஐ.

இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அதே போல, உயிர் பாதுகாப்பு சுழலுக்குள் வந்து விட்ட யாரும் மீண்டும் வெளியே சென்று விட்டு, உள்ளே வர முடியாது.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ களமிறங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் தான் ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தது பிசிசிஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2014 ஐபிஎல் தொடரின் சில போட்டிகள் நடைபெற்று இருந்ததால், அதே நாட்டில் 2020 ஐபிஎல் தொடரையும் நடத்த முடிவு செய்துள்ளது.

ஒப்புதல் பெற பிசிசிஐ முயற்சி

ஒப்புதல் பெற பிசிசிஐ முயற்சி

2020 ஐபிஎல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற பிசிசிஐ முயற்சித்து வருகிறது, மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் தொடரை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யத் துவங்கி உள்ளது.

பயோ பபுள்

பயோ பபுள்

"பயோ பபுள்" எனும் உயிர் பாதுகாப்பு சுழல் ஏற்படுத்தப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுனர் வரை அனைவரும் அதை விட்டு விலகக் கூடாது.

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

ஒருவேளை யாரேனும் உயிர் பாதுகாப்பு சுழலை விட்டு விலகினால் அவர்களை மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் அனுமதிக்க முடியாது எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது வீரர்களுடன் பயணிக்கும் மனைவி, காதலி அல்லது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.

நான்கு முறை..

நான்கு முறை..

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பும் முன் ஒரு வாரத்தில் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். பின் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின் முதல் வாரத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.

ஹோட்டலில் தங்க..

ஹோட்டலில் தங்க..

மேலும், ஹோட்டலில் தங்கவும் கடும் விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளதாகவும், இது தொடர்பான விரிவான விதிமுறைகளை ஐபிஎல் அணிகளுக்கு இன்னும் சில நாட்களில் அறிவுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளை அப்படியே பிசிசிஐ கடைபிடிக்கப் போவதாக தெரிகிறது. மெகா தொடரான ஐபிஎல் தொடர் இத்தனை கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Thursday, July 30, 2020, 14:44 [IST]
Other articles published on Jul 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+