For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.. பரபர தகவல்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் இருந்து புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஒரே நாளில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர். அமித் மிஸ்ரா டெல்லி கேபிடல்ஸ் அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று ஆடி வந்தார்.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அங்கே உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் ஆடி வந்த இரண்டு வீரர்கள் காயத்தால் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு வீரர்கள் விலகல்

இரண்டு வீரர்கள் விலகல்

புவனேஸ்வர் குமார் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய இரண்டு அனுபவ பந்துவீச்சாளர்கள் ஒரே நேரத்தில் காயத்தில் சிக்கினர். இருவரும் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது அவர்கள் ஆடி வரும் அணிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

புவனேஸ்வர் குமார் காயம்

புவனேஸ்வர் குமார் காயம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தன் கடைசி ஓவரில் ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார் புவனேஸ்வர் குமார். அவருக்கு இதற்கு முன் பல முறை காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அது போலவே இப்போதும் அவர் மீண்டு வருவார் என கருதப்பட்டது.

அடுத்த போட்டியில் ஆடவில்லை

அடுத்த போட்டியில் ஆடவில்லை

சிஎஸ்கே அணியை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார் பங்கேற்கவில்லை. அவர் இரண்டு போட்டிகளுக்கு பின் அணியில் இணைவார் என கூறி இருந்தார் கேப்டன் டேவிட் வார்னர்.

விலகல்

விலகல்

ஆனால், இப்போது புவனேஸ்வர் குமார் முற்றிலுமாக மீதமுள்ள 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருந்தார்.

ஹைதராபாத் நிலை என்ன?

ஹைதராபாத் நிலை என்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமாரை அடுத்து டி நடராஜன் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் ஹைதராபாத் அணிக்கு இது பெரிய இழப்பாகும்.

அமித் மிஸ்ரா காயம்

அமித் மிஸ்ரா காயம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் முதல் ஓவரிலேயே விரலில் காயம் அடைந்தார். பீல்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அமித் மிஸ்ரா விலகல்

அமித் மிஸ்ரா விலகல்

அந்தப் போட்டியில் அவர் 2 ஓவர்களில் 14 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் பின் அவர் பந்து வீசவில்லை. இந்த நிலையில் அவர் காயம் மோசமாக இருப்பதால் அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

டெல்லி நிலை என்ன?

டெல்லி நிலை என்ன?

டெல்லி அணியின் அஸ்வின் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவருக்கு காயம் ஏற்பட்ட போது அமித் மிஸ்ரா அணியில் ஆடினார். அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், டெல்லி அணிக்கு அவர் இல்லாதது இழப்பாகும்.

Story first published: Monday, October 5, 2020, 17:34 [IST]
Other articles published on Oct 5, 2020
English summary
IPL 2020 : Bhuvneshwar Kumar, Amit Mishra ruled out of IPL 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+